Connect with us

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்,சூர்யா,விக்ரம் தான்… நம்ம கதை முடிஞ்சது!.. விரக்தியில் இருந்த ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்!.

rajinikanth

Cinema History

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்,சூர்யா,விக்ரம் தான்… நம்ம கதை முடிஞ்சது!.. விரக்தியில் இருந்த ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்!.

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் நடிகர் ரஜினிகாந்துக்கு தோல்வி பயத்தை காட்டிய திரைப்படங்களும் உண்டு. ஆனால் வழக்கமாக சில படங்கள் தோல்வியடையும் பொழுது ரஜினிகாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.

ஆனால் 2002ல் அவர் நடித்து வெளியான பாபா திரைப்படம் படுதோல்வி அடைந்தபோது அதற்காக வெகுவாக மனமுடைந்தார் ரஜினிகாந்த். ஏனெனில் அவர் மிகவும் ஆசைப்பட்டு எடுத்த திரைப்படம் அது கண்டிப்பாக பெரும் வெற்றி அடையும் என்று நினைத்தார் ரஜினிகாந்த். இதனால் விரத்தியிலிருந்து ரஜினிகாந்த் பிறகு சில நாட்களுக்கு படமே நடிக்காமல் இருந்தார்.

அப்பொழுது அவரது நிலையை கண்ட இயக்குனர் பாலச்சந்தர் சாமி திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்தை அழைத்து இருந்தார். அப்போது இந்த நடிகர்களின் திரைப்படங்களை எல்லாம் ரஜினிகாந்த் தொடர்ந்து பார்த்து வந்தார்.

எனவே அவர் அந்த பேட்டியில் பேசும் பொழுது மிகவும் விரக்தியில் இருந்த காரணத்தினால் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ஒரு தற்காலிகமானதுதான் மக்கள் எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆக்குவார்கள் அதைப்போல அவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் பெரும் நடிகனின் படமாக இருந்தாலும் பார்க்க மாட்டார்கள் என்று பேசிய ரஜினிகாந்த் தற்சமயம் விஜய் நடித்த வசீகரா திரைப்படத்தை பார்த்தேன்.

அது மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோல விக்ரம் நடித்த சாமி திரைப்படம் சிறப்பான படமாக இருந்தது. அதேபோல சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படத்தை நான் மாறுவேடத்தில் சென்று திரையரங்கிலேயே பார்த்து வந்தேன். இவர்களெல்லாம் அடுத்து பெரும் மார்க்கெட்டை பெறும் நாயகர்ளாக இருப்பார்கள் என்று கூறினார் ரஜினிகாந்த்.

சொல்லப்போனால் அந்த பேட்டியில் அவர் பேசிய பொழுது இதோடு அவருடைய காலம் முடிந்துவிட்டது என்று நினைத்து இருந்தார் ரஜினிகாந்த் ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்து 2005 இல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் ரஜினிகாந்தின் மொத்த எண்ண ஓட்டத்தையும் மாற்றி அமைத்தது.

தமிழ் சினிமா மக்கள் இன்னும் தன்னை கைவிடவில்லை என்று அப்போது புரிந்து கொண்டார் ரஜினிகாந்த் ஏனனில் சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி வெற்றி பெற்றது.

To Top