Connect with us

ரஜினி வரலைனா என்ன ராம்சரணை கூப்பிடுங்க!.. லைக்காவுக்கும் ரஜினிக்கும் ஏற்பட்ட மனகசப்பு!..

ram charan rajinikanth

News

ரஜினி வரலைனா என்ன ராம்சரணை கூப்பிடுங்க!.. லைக்காவுக்கும் ரஜினிக்கும் ஏற்பட்ட மனகசப்பு!..

Social Media Bar

சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுப்பதால் அவரை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

அதிலும் தற்சமயம் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் கூலி திரைப்படத்தை தயாரிப்பதற்கு எல்லாம் மிகப்பெரும் போட்டிகள் நடந்திருக்கின்றன. அதற்கு நடுவேதான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரஜினிக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் இடையே தொடர்ந்து மனகசப்பு இருந்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

rajinikanth
rajinikanth

லால் சலாம் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் சரியாக விளம்பரப்படுத்தாதே அதன் தோல்விக்கு காரணம் என்பது ரஜினிகாந்தின் மனநிலையாக இருக்கிறதாம். அதே போலவே தற்சமயம் அடுத்து லைக்கா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தையும் கூட இப்போது வரை சரியாக விளம்பரப்படுத்தவில்லை லைக்கா நிறுவனம்.

இன்னமும் வெகு ஜனங்களுக்கு ரஜினி வேட்டையன் என்கிற ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதே தெரியவில்லை. இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினியை சிறப்பு விருந்தினராக அழைக்க திட்டமிட்டதாம் லைக்கா நிறுவனம்.

ஆனால் இந்த மனகசப்பு காரணமாக ரஜினிகாந்த் அந்த விழாவிற்கு வருகை தர விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே நடிகர் ராம்சரணை இந்த விழாவிற்கு அழைக்கலாம். அதன் மூலம் அடுத்து ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திற்கு விளம்பரம் செய்துவிடலாம் என திட்டமிடுகிறாராம் இயக்குனர் ஷங்கர்.

To Top