Connect with us

அப்பவே பாபர் மசூதி இடிப்புக்கு எதிரா பேசுனா சூப்பர் ஸ்டார்!.. இப்பதான் பல்டி அடிச்சிட்டாரா?.. ட்ரெண்டாகும் வீடியோ!..

rajinikanth masjid

Cinema History

அப்பவே பாபர் மசூதி இடிப்புக்கு எதிரா பேசுனா சூப்பர் ஸ்டார்!.. இப்பதான் பல்டி அடிச்சிட்டாரா?.. ட்ரெண்டாகும் வீடியோ!..

Social Media Bar

Rajinikanth: இந்து மதம் குறித்து ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை பேசும் பொழுதும் அது சமூக வலைதளங்களில் பெரிதாக சர்ச்சையை ஏற்படுத்தி வருவது வழக்கமான ஒரு விஷயமாகும்.

ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்த இளமை காலங்களில் இருந்து அவருக்கு ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கை உண்டு. அப்போதிலிருந்து இமயமலைக்கு சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார் ரஜினிகாந்த். இதற்காகவே இமய மலைக்கு அருகில் அவர் ஒரு ஹோட்டல் கட்டி வைத்திருக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் உண்டு.

இந்த நிலையில்தான் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சனாதன தர்மம் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்த விஷயங்கள் சர்ச்சையை கிளப்பி இருந்தன. ஏனெனில் சனாதன கொள்கை என்பது சாதிய முறைக்கு ஆதரவான ஒரு கொள்கையாக தமிழக மக்களால் பார்க்கப்படுகிறது.

rajinikanth
rajinikanth

இந்த நிலையில் அதற்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியிருப்பது பலருக்கும் பிடிக்காத விஷயமாக அமைந்திருந்தது. இதற்கு நடுவே இராமர் கோவிலுக்கு சென்று வந்த ரஜினிகாந்த் 500 ஆண்டுகால போராட்டத்திற்கான தீர்வு ராமர் கோவில் என்று கூறியிருந்ததும் பெரும் சர்ச்சைக்கு உண்டாகி இருந்தது.

இதற்கு நடுவே வள்ளி திரைப்படத்தில் ராமர் கோயில் தொடர்பான பிரச்சனை குறித்து அப்பொழுது ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அதில் பேசும் பொழுது ஒவ்வொருவரும் தனது மனதில் ராமர் கோயிலையும் மசூதையையும் கட்டினால் மட்டுமே இங்கு அமைதி நிலவும் என்று ரஜினி கூறியிருப்பார். அப்படியான ரஜினி தற்சமயம் ராமர் கோயிலுக்கு மட்டுமே ஆதரவாக பேசுபவராக மாறி இருப்பதன் காரணம் என்ன என்று கூறி அந்த வீடியோவை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Video Link – Click Here

Articles

parle g
madampatty rangaraj
To Top