Connect with us

நடிகர் ஆகலைனாதான் நான் சந்தோஷமா இருந்திருப்பேன்!.. ரசிகனுக்கு ரஜினி சொன்ன பதில்!..

rajinikanth

Cinema History

நடிகர் ஆகலைனாதான் நான் சந்தோஷமா இருந்திருப்பேன்!.. ரசிகனுக்கு ரஜினி சொன்ன பதில்!..

Social Media Bar

ஒரு சாதாரண மனிதனாக இருந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டிருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த ரஜினிகாந்த் சினிமாவில் வாய்ப்பைப் பெற்று தனது தனி பெரும் நடிப்பு திறமையால் தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டுள்ளார்.

இப்போது வரை தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த முதல் 10 படங்களை எடுத்தால் அதில் நான்கு படங்களாவது ரஜினிகாந்தின் படங்கள் இருக்கும். அந்த அளவிற்கு வசூல் மன்னன் என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த்.

விஜயகாந்த் ஒருமுறை நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஸ்டார் நைட் என்னும் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனும் பங்கு கொண்டனர். அப்பொழுது ரஜினிகாந்திடம் ரசிகர் ஒருவர் ஒரு முக்கியமான கேள்வியை கேட்டார்.

அதாவது ஒருவேளை சினிமாவிற்கு வரவில்லை என்றால் நீங்கள் என்ன தொழில் செய்து கொண்டிருப்பீர்கள் என்று அவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் சினிமாவிற்கு வரவில்லை என்றால் டிராபிக் துறை தொடர்பாக ஏதாவது ஒரு வேலைக்கு சென்று இருப்பேன்.

ஆனால் எந்த வேலைக்கு சென்று இருந்தாலும் இப்பொழுது இருப்பதை விடவும் மகிழ்ச்சியாகதான் இருந்திருப்பேன் என்று வெளிப்படையாக கூறினார். ரஜினிகாந்த் ஏனனில் ஒரு பிரபலத்திற்கு இருக்கும் மன ரீதியான பிரச்சினைகள் அந்த அளவிற்கு மோசமானவை என்பதை அந்த பதிலின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் ரஜினிகாந்த்.

To Top