Connect with us

ஓசி கார்ல வந்தப்பதான் நான் பணக்காரன்னு உணர்ந்தேன்.. ரஜினியின் சர்ச்சை பேச்சு!..

rajinikanth car

Cinema History

ஓசி கார்ல வந்தப்பதான் நான் பணக்காரன்னு உணர்ந்தேன்.. ரஜினியின் சர்ச்சை பேச்சு!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் டாப் லெவலில் இருக்கும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். இன்னமும் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த அளவிற்கு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் கொடுக்கும் இன்னொரு நடிகரை பார்க்க முடியவில்லை.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த், அனிரூத்,நெல்சன் ஆகியோருக்கு பரிசுகளை வாங்கி கொடுத்தார்.

மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக விழா ஒன்றையும் நடத்தினார் கலாநிதிமாறன். இந்த விழாவில் கலந்துக்கொண்ட ரஜினிகாந்த் பேசும்போது கலாநிதி மாறன் தனக்கு வாங்கி கொடுத்த காரில் வரும்போதுதான் தன்னை பணக்காரனாக உணர்ந்ததாக கூறியிருந்தார்.

இந்த பேச்சு நெட்டிசன்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படத்திற்கு பல கோடி ரூபாய் சம்பளமாக வாங்க கூடியவர் ரஜினிகாந்த். அவர் நினைத்தால் எவ்வளவு விலை உயர்ந்த காரும் வாங்க முடியும். ஆனால் ஒரு இலவச காரில் வந்தப்போதுதான் தன்னை பணக்காரனாக உணர்ந்ததாக கூறுகிறாரே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

To Top