கமல்ஹாசனுக்கு விக்ரம் மாதிரி ரஜினிக்கு இந்த பேரா!.. லீக் ஆன தலைவர் 171 படத்தின் பெயர்!.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்திலும் ரஜினிகாந்த் போலீசாகதான் நடித்து வருகிறார். படத்தின் கதைப்படி ரஜினிகாந்த் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் என்கவுண்டருக்கு எதிராக பேசுவதாக கூறப்படுகிறது. அரசாங்கமாகவே இருந்தாலும் ஒரு உயிரை எடுப்பது தவறுதான் என்கிற பாணியில் படம் செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் திரைப்படம் தலைவர் 171.

இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். அடுத்து வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்தின் வேலைகள் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

thalaivar-171
thalaivar-171
Social Media Bar

அந்த போஸ்டரில் விஜய் தனது கைகளில் வாட்ச்சை கொண்டே கைவிலங்கு போல கட்டியிருப்பதாக இருந்தது. இதை வைத்து இந்த படம் டைம் ட்ராவல் படம் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தது. இன்னும் சிலர் கூறும்போது ஸ்பீடு திரைப்படத்தில் வருவது போல குறிப்பிட்ட நேரத்திற்குள் சரி செய்ய வேண்டிய ஒரு பிரச்சனையில் ரஜினி மாட்டிக்கொள்கிறார்.

அந்த நேரத்திற்குள் அதை சரி செய்யவில்லை என்றால் அது பெரிய அழிவை ஏற்படுத்தும். இந்த நிலையில் அடுத்து ரஜினி என்ன செய்வார் என்பதுதான் கதை எனவும் பேச்சுக்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த படத்திற்கு ரஜினி ஏற்கனவே நடித்த பழைய படத்தின் பெயர்தான் வைக்கப்பட இருக்கிறது என கூறப்படுகிறது.

எப்படி கமலுக்கு அவர் ஏற்கனவே நடித்த விக்ரம் திரைப்படத்தின் பெயரையே புது படத்திற்கு வைத்தார்களோ அதே போல இந்த படத்திற்கும் வைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் பெயர் கழுகு என இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் கழுகு என்கிற பெயரில் ஏற்கனவே ரஜினி நடித்து ஒரு படமும் பிறகு 2012 இல் இன்னொரு படமும் வந்திருக்கின்றன.

எனவே இந்த படத்திற்கு தளபதி என்பதுதான் பெயராக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.