News
வேட்டையன் படத்தின் கதை இதுதான்… ரஜினி தலையிட்டு முதல் பாதியை மாத்திட்டார்!..
ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டானது. அதற்கு ரஜினிகாந்தை விடவும் படத்தின் இயக்குனர்தான் முக்கிய காரணமாக இருந்தார். ஜெய் பீம் என்ற சிறப்பான ஒரு திரைப்படத்தை வழங்கிய இயக்குனர் தா செ ஞானவேல் தான் தற்சமயம் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் தலைவர் 171 திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.
இந்த திரைப்படத்தின் டீசர் நேற்றைய வெளியானது டீசர் வெளியான போதுதான் படத்தின் பெயர் வேட்டையன் என்பதும் தெரிந்தது. இந்த திரைப்படம் ஜெய் பீம் திரைப்படம் போலவே ஒரு அரசியல் சார்ந்த திரைப்படமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் போது பலதரப்பட்ட மக்களை அந்த செய்தி போய் சேரும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்தாலும் படத்தின் டீசர் அப்படியான ஒரு டீசராக தெரியவில்லை.

இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நிலையில் சினிமாவை சேர்ந்த சிலர் இது குறித்து பேசும் பொழுது கண்டிப்பாக ஞானவேல் அரசியல் சார்ந்த ஒரு கதைகளத்தை தான் எழுதி இருப்பார். ஆனால் ரஜினியை வைத்து படம் எடுக்கும் பொழுது படத்திற்கு சில ஆக்ஷன் காட்சிகளும் சில கமர்சியல் விஷயங்களும் தேவைப்படும்.
அதற்காக படத்தின் முதல் பாதியின் கதை மாற்றப்பட்டிருக்கலாம் என்று பேசப்படுகிறது. ஏனெனில் படம் ஆரம்பித்த பொழுது படத்தின் கதை என்கவுண்டர்களுக்கு எதிரான ஒரு படம் என்று தான் பேசப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த் துப்பாக்கியை வைத்து சுடுவதை ஒரு மாஸ் சீனாக காண்பித்தால் அது எப்படி என்கவுண்டருக்கு எதிரான படமாக இருக்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது.
சிலர் பேசும்பொழுது படத்தின் முதல் பாதியில் ரஜினிகாந்த் என்கவுண்டருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பிறகு அவருக்கு அதன் பிரச்சினைகள் தெரிய துவங்கியதும் அவர் மாறிவிடுவதாகவும் கதை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் என்கவுண்டருக்கு எதிராக அதே போல விக்ரம் பிரபு ஒரு படத்தில் நடித்திருக்கிறா.ர் எனவே அப்படியாக கதையாக இருக்கவும் வாய்ப்பில்லை என்றும் ஒரு தரப்பில் பேச்சு இறந்து வருகிறது ஆனால் எப்படி இருந்தாலும் ரஜினியின் தலையிட்டால் தான் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக சேர்ந்து உள்ளது என்பதே ரசிகர்களின் வாக்குவாதமாக இருக்கிறது.
