Connect with us

பாபா படப்பிடிப்பில் கவுண்டமணியிடம் கெஞ்சிய ரஜினி..- கவுண்டமணினா எல்லாருக்குமே பயம் போல!

Cinema History

பாபா படப்பிடிப்பில் கவுண்டமணியிடம் கெஞ்சிய ரஜினி..- கவுண்டமணினா எல்லாருக்குமே பயம் போல!

Social Media Bar

கவுண்டர்களாக கொடுத்து அனைவரையும் கலாய்க்கும் காரணத்தாலேயே அனைவராலும் கவுண்டர் மணி என அழைக்கப்பட்டு பிறகு கவுண்ட மணி என பெயர் மாறியது. இப்படிதான் அந்த நடிகருக்கு கவுண்டமணி என பெயர் வந்தது.

கவுண்டமணி படத்தில் நடிக்கும்போது பெரும் நடிகர்களே இவர் எதாவது கலாய்த்துவிடுவாரோ என பயப்படுவதுண்டு. அந்த அளவிற்கு போகிற போக்கில் நடிகர்களையே கலாய்த்துவிடுவார் கவுண்டமணி. ரஜினிகாந்த் பல படங்களில் கவுண்டமணியுடன் நடித்துள்ளார்.

மன்னன், மிஸ்டர் பாரத் இன்னும் பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். சில நேரங்களில் கவுண்டமணியின் காமெடி தாங்காமல் ரஜினியே சிரித்துவிடுவார். வெகு நாட்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் பாபா.

பாபா திரைப்படத்தில் கவுண்டமணியோடு நடிக்கும் காட்சிகள் வரும்போதெல்லாம் அவரிடம் சென்ற ரஜினி அண்ணே என்ன மட்டும் கலாய்ச்சிராதீங்க என கூறியுள்ளார். அந்த அளவிற்கு தமிழ் சினிமா கவுண்டமணியின் கலாய்க்கு பயந்துள்ளது.

இதே போல ஒருமுறை இவர் கமல்ஹாசனையும் கலாய்த்து அதனால் இவர்கள் இருவருக்குமிடையே பெரும் சண்டை ஆனது. அதன் பிறகு கமல்ஹாசன் அவரது படம் எதற்குமே கவுண்டமணிக்கு வாய்ப்புகளே தரவில்லை என்று சினி வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு.

To Top