Connect with us

அந்த நாலு வருஷம்தான்.. என் வாழ்க்கையே மாறி போச்சு!. ஓப்பன் டாக் கொடுத்த ராமராஜன்!..

ramarajan

Cinema History

அந்த நாலு வருஷம்தான்.. என் வாழ்க்கையே மாறி போச்சு!. ஓப்பன் டாக் கொடுத்த ராமராஜன்!..

Social Media Bar

சினிமாவில் ஒரு நடிகர் பெரும் உயரத்தை தொடுவது என்பது அவரது வெற்றியின் விகிதத்தை பொறுத்தே அமைகிறது. தொடர்ந்து ஒரு நடிகர் வெற்றி படங்களாக நடித்து வருகிறார் என்றால் கண்டிப்பாக அவர் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு விடுவார்.

அப்படி சினிமாவில் பெரும் உயரத்தை குறைந்த காலங்களிலேயே பெற்றவர்தான் ராமராஜன். ஆரம்பத்தில் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில்தான் ராமராஜன் வாய்ப்பு தேடி வந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ramarajan
ramarajan

அதனை தொடர்ந்து உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் ராமராஜன். அதற்கு பிறகுதான அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதாநாயகனாக நடிக்க துவங்கி சில வருடங்களிலேயே சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார் ராமராஜன்.

இதுக்குறித்து அவர் தனது பேட்டியில் பேசும்போது என்னுடைய மொத்த சினிமா வாழ்க்கை என்பதே வெறும் 4 வருடங்கள்தான். 1986 இல் கதாநாயகனாக முதல் படத்தில் நடித்தேன். அதற்கு பிறகு 1990 வரை எனது படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தன.

அதற்கு பிறகு எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஏன் அவ்வளவு சீக்கிரத்தில் நான் வாய்ப்பை இழந்தேன் என எனக்கே தெரியவில்லை. ஆனால் எனது படத்தின் வெற்றிக்கு அண்ணன் இளையராஜாவின் பாடல்களும் முக்கிய காரணம் என கூறுகிறார் ராமராஜன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top