Connect with us

ஹிந்தி நடிகரை வளைத்துப்போட்ட தமிழ் இயக்குனர்கள்… அப்படி என்னதான் இருக்கு இவங்ககிட்ட?…

News

ஹிந்தி நடிகரை வளைத்துப்போட்ட தமிழ் இயக்குனர்கள்… அப்படி என்னதான் இருக்கு இவங்ககிட்ட?…

Social Media Bar

Ranbir,Nelson & Lokesh:இந்திய திரையுலகில் தமிழ் திரைக்களத்திற்கு என்று ஒரு மிகப்பெரிய இடம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் போட்டிகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் ஹிந்தி, மற்றும் இதர மொழி படங்களில் அந்தந்த மொழி பேசும் நடிகர்களுக்குத்தான் மௌசு அதிகம் காரணம் என் நடிகனை தான் நான் பாராட்டுவேன் அதாவது என் மண்ணை நான் தான் ஆள வேண்டும் என்பது போல.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தமிழில் நடிப்பவர் தமிழ் நடிகன் மட்டுமல்ல மற்ற மொழி பேசும் நடிகர்களும் தமிழ் மொழி படத்தில், தமிழ் மொழி இயக்குனருடன் பணியாற்ற முடிந்தது.

அதே போல் தமிழ் நடிகர்களும் மற்ற மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைத்தது. மொழி சினிமா புகழ் பேசியவர்கள் எல்லாரும் இப்போது இந்திய சினிமா என்றும் எந்த மொழியில் படம் எடுத்து வென்றாலும் அது இந்திய சினிமா என்று தான் போற்றப்பட வேண்டும் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

குறிப்பாக மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் உருவான படங்களை தமிழ் மக்களும் ரசிக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ் மொழி படங்களை மற்ற மொழி மக்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதன் அடுத்தகட்டமாக அண்டை மாநில மொழி பேசும் நடிகர்கள் தமிழ் மொழி படம் நடித்தது தாண்டி இப்போது ஹிந்தி பேசும் பாலிவுட் நடிகர்களுக்கும் தமிழ் சினிமா மீதும் தமிழ் சினிமா இயக்குனர்கள் மீதும் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. அதன் விளைவுதான் ஜவான்.

தமிழ் மொழி பேசத்தெரியாத ஹிந்தி நடிகர் சாருக்கானை தமிழ் இயக்குனர் இயக்கி அந்த படம் தற்போது மாபெரும் ஹிட் கொடுத்து வசூலை குவித்துள்ளது.

பாலிவுட் நடிகர்களை கவர்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல ஆனால் இன்று எல்லா ஹிந்தி நடிகர்களையும் கவர்ந்து இழுக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உருவாகிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்று சென்னையில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகவுள்ள  “அனிமல்” திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ரன்பீர் கபூரை கவர்ந்த மூன்று படங்களில் தற்போது வெளிவந்த லியோ மட்டுமல்லாமல் விக்ரம் மற்றும் ஜெயிலர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தின் இயக்குனர்கள் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் பற்றியும் அவர்களின் கதை உருவாக்கம் பற்றியும் மேடையில் புகழ்ந்து பேசியிருக்கிறார். இதிலிருந்து அடுத்து ஹிந்தி நடிகரை இயக்க தமிழ் இயக்குனர்கள் தயாராக உள்ளனர் என்பது தெளிவாக புரிகிறது.

To Top