Connect with us

நான் அதை பண்ணிதான் ஹிந்தில வாய்ப்பை பெறணும்னா அது எனக்கு வேண்டாம்.. பகீரங்கமாக கூறிய நடிகை ரெஜினா..

regina

Tamil Cinema News

நான் அதை பண்ணிதான் ஹிந்தில வாய்ப்பை பெறணும்னா அது எனக்கு வேண்டாம்.. பகீரங்கமாக கூறிய நடிகை ரெஜினா..

Social Media Bar

Famous Tamil actress Regina Kessandra spoke about the problems of acting in Bollywood cinema in an interview.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ஓரளவு பிரபலம் அடைந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. பெரும்பாலும் ரெஜினா வாய்ப்புகள் கிடைத்தாலே போதும் நடித்து விடுவோம் என்கிற நிலையில் தான் ஆரம்பத்தில் இருந்தார்.

அதனால் கதைக்களங்களை பார்த்து கூட தேர்ந்தெடுக்காமல் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார். ஆரம்பத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் வரவேற்பை பெறும் படங்களாகதான் இருந்தன.

கேடி பில்லா கில்லாடி ரங்கா மூலமாக தான் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார் ரெஜினா. அந்த திரைப்படத்தில் அவருக்கு இருந்த கதாபாத்திரம் மிக நன்றாக இருந்தது அதேபோல மாநகரம் திரைப்படத்திலும் முக்கிய கதாநாயகியாக ரெஜினா தான் இருந்து வந்தார்.

regina

regina

பாலிவுட்டில் உள்ள பிரச்சனை

ஆனாலும் கூட அதற்கு பிறகு அவர் தேர்ந்தெடுத்த நிறைய திரைப்படங்கள் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்புகளும் இல்லாமல் போனது. பிறகுதான் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்க துவங்கினார்.

அப்படியாக அவர் வில்லியாக கூட நடித்து இருக்கிறார். இந்த நிலையில் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து நடித்த்தை குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார் ரெஜினா. அதில் அவர் கூறும்போது பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்றால் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டி இருக்கிறது.

முக்கியமாக சரளமாக பாலிவுட்டில் பேசத் தெரிந்தால் தான் பாலிவுட்டில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் நமக்கு அவர்கள் மொழியில் பேச தெரியாவிட்டாலும் கூட நம்மை நடிக்க வைத்து விட்டு டப்பிங்கில் பார்த்துக் கொள்கிறார்கள்.

regina

regina

அதேபோல ஹிந்தியை பொறுத்தவரை பி.ஆர் ஆட்களை நியமித்து ஹிந்தியில் வெளியாகும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கு பெற்று நமது மார்க்கெட்டை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எல்லாம் என்னை விற்று தான் சினிமாவில் வாய்ப்புகளை பெற வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் பாலிவுட் ரசிகர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு வரதுவங்கி இருக்கிறது. பாலிவுட்டில் ரெஜினாவை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

To Top