Tamil Cinema News
6 மாதத்தில் விவாகரத்து.. வீட்டில் சல்லடை போட்ட அமலாக்க துறை.. நடிகை சுகன்யா குறித்த அதிர்ச்சி தகவல்..!
இயக்குனர் பாரதிராஜா மூலமாக பல பிரபலங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கின்றனர். நடிகர் பாண்டியன், ராதிகா, ரேவதி மாதிரியான நிறைய பேரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா.
அப்படியாக பாரதிராஜா மூலமாக அறிமுகமான மற்றொரு நடிகைதான் நடிகை சுகன்யா. நடிகை சுகன்யா அவ்வளவாக மாடர்ன் உடையில் நடிப்பதை யாரும் பார்க்க முடியாது. மிக அரிதாக சில படங்களில் நடித்திருப்பார்.
மற்றபடி பெரும்பாலும் புடவை கட்டி நடிக்கக் கூடியவர் சுகன்யா இருந்தாலும் கூட அவருக்கு என்று ஒரு தனிப்பட்ட மார்க்கெட் இருந்ததற்கு காரணம். அவருக்கு இருந்த நடிப்பு திறமைதான்.
இந்தியன் திரைப்படத்தில் கூட கமலுக்கும் மனைவியாக நடித்த பொழுது கமலுக்கு இணையான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சுகன்யா. இந்த மாதிரியான விஷயங்களால் அதிக வரவேற்பு பெற்றும் கூட நடிகையாக சுகன்யா இருந்திருக்கிறார்.
நடிகை சுகன்யா:
சுகன்யாவின் திருமண வாழ்க்கையை பொருத்தவரை அது மிக மோசமானதாக அமைந்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் இது குறித்து கூறும் பொழுது நடிகை சுகன்யா ஒரு அமைச்சர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
அவரை திருமணம் செய்த 6 மாதத்தில் விவாகரத்து செய்தார். அதன் பிறகு சுகன்யாவிற்கு வீட்டிற்கு அமலாக்கத்துறை வந்து சல்லடை போட்டு தேடினர். என்னவென்று பார்க்கும் போது அந்த அமைச்சரின் பினாமி தான் சுகன்யா என்றெல்லாம் அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அது மிகப் பிரபலமாக பேசப்பட்ட விஷயமாக இருந்தது என்று அந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
