Connect with us

விஷால் இவ்வளவு பேசுறதுக்கு அந்த ஒரு விஷயத்தை சரி பண்ண சொல்லுங்க போதும்.. நேரடியாக கூறிய சினிமா விமர்சகர்..!

Tamil Cinema News

விஷால் இவ்வளவு பேசுறதுக்கு அந்த ஒரு விஷயத்தை சரி பண்ண சொல்லுங்க போதும்.. நேரடியாக கூறிய சினிமா விமர்சகர்..!

Social Media Bar

சமீப காலங்களாகவே தொடர்ந்து சினிமா விமர்சகர்களை சினிமா துறையை சேர்ந்தவர்கள் எதிரி போல பார்க்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏனெனில் ஒரு திரைப்படம் நன்றாக இல்லை என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள் என்றால் அது அந்த படத்தின் வசூலையே அது பாதிக்கிறது.

இதனால் தயாரிப்பாளர்களும் திரையரங்க முதலாளிகளும் தொடர்ந்து சினிமா விமர்சனங்களுக்கு எதிரான மனநிலையை கொண்டு இருக்கின்றனர். இதற்கு நடுவே தற்சமயம் நடிகர் விஷாலுமே கூட சினிமா விமர்சகர்கள் குறித்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு யாருமே விமர்சனம் செய்யக்கூடாது. விமர்சனம் செய்யவும் அவர்களை அனுமதிக்க கூடாது என்பதாக பேசியிருந்தார்.

vishal

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த பிரபல தமிழ் சினிமா விமர்சனரான பிரசாந்த் கூறும் பொழுது திரைப்படங்களுக்கு விமர்சனம் கொடுக்க கூடாது என்று கூறுவதே முதலில் ஒரு ஜனநாயக முறை கிடையாது.

கண்டிப்பாக அது நடந்து கொண்டுதான் இருக்கும் நீங்கள் மிக எளிதாக ஒரு திரைப்படத்தை நல்லபடியாக எடுத்து விட்டீர்கள் என்றாலே போதும் அந்த திரைப்படம் அனைத்தையும் தாண்டி வெற்றியை கொடுத்து விடும் எனவே விமர்சனங்களை நிறுத்துவதற்கு பதிலாக அதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறி இருக்கிறார் இட்ஸ் பிரசாந்த்.

To Top