Connect with us

விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த ஆர்.ஜே பாலாஜி… நல்ல சான்ஸ் போச்சே!..

rj balaji vijay

Cinema History

விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த ஆர்.ஜே பாலாஜி… நல்ல சான்ஸ் போச்சே!..

Social Media Bar

RJ Balaji and Vijay : விஜய் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர். விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஒரு ஆரம்பக்கட்ட இயக்குனருக்கு விஜய்யை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது அவரது வாழ்க்கையையே மாற்றிவிடும்.

அதற்கு சிறந்த உதாரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்துதான் படம் இயக்கினார்.

இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜிக்கு விஜய்யை வைத்து படம் இயக்குவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆர்.ஜே பாலாஜி வீட்ல விசேஷம் திரைப்படத்தை இயக்கி அதில் நடித்து வந்தார். அப்போது அவர் விஜய்க்காக ஒரு கதையை எழுதியிருந்தார்.

அந்த கதையை விஜய்யிடம் கூறி அவருக்கு அது பிடித்திருந்தால் ஒரு வருடம் கழித்து படமாக்கலாம் என முடிவு செய்திருந்தார் ஆர்.ஜே பாலாஜி. ஏனெனில் அந்த சமயத்தில் விஜய் வாரிசு மற்றும் லியோ திரைப்படங்களில் வரிசையாக கமிட் ஆகி இருந்தார்.

இந்த நிலையில் விஜய்யிடம் கதையை கூறினார் ஆர்.ஜே பாலாஜி. அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போகவே அதை லியோ திரைப்படம் துவங்குவதற்கு முன்பே நடித்து முடித்துவிடலாம். சில நாடகளிலேயே அந்த படப்பிடிப்பை முடித்துவிடலாம் என கூறினார் விஜய்.

ஆனால் அப்போது வீட்ல விசேஷம் திரைப்படத்தை இயக்கி வந்ததால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் ஆர்.ஜே பாலாஜி.

To Top