Connect with us

என்ன வச்சிக்கிட்டே அந்த பேச்சு பேசுனாங்க… விக்னேஷ் சிவன் படத்தில் அவமானப்பட்ட ஆர்.ஜே பாலாஜி.!

Tamil Cinema News

என்ன வச்சிக்கிட்டே அந்த பேச்சு பேசுனாங்க… விக்னேஷ் சிவன் படத்தில் அவமானப்பட்ட ஆர்.ஜே பாலாஜி.!

Social Media Bar

வானொலித் துறையில் தொகுப்பாளராக இருந்து பிறகு அதன் மூலமாகவே அதிக பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆர் ஜே பாலாஜியை பொருத்தவரை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமானாலும் தொடர்ந்து காமெடி நடிகனாகவே நடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதை அறிந்திருந்தார் ஆர்.ஜே பாலாஜி. அதனை தொடர்ந்துதான் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

ஆர்.ஜே பாலாஜி:

அவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான எல்.கே.ஜி திரைப்படமே அரசியலை நக்கல் செய்யும் விதமாக இருந்தது. அதனால் அந்த படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. தொடர்ந்து பொதுவெளியில் அரசியல் சார்ந்து நிறைய பேசி வருகிறார். ஆர்.ஜே பாலாஜி.

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனராக இருக்கும் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் அடுத்து சூர்யா நடிக்கும் திரைப்படத்தையும் ஆர்.ஜே பாலாஜிதான் இயக்க இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய முதல் திரைப்படமான நானும் அப்படித்தான் திரைப்படம் அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஒரு வேனை ஓட்டுவது போன்ற காட்சி இருக்கும்.

கடுப்பான நடிகர்:

அந்த சமயத்தில் எனக்கு கார் வேன் போன்றவற்றையெல்லாம் ஓட்ட தெரியாது. எனவே நான் ஓட்டுவது போல நடிக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. நான் ஒவ்வொருமுறை காட்சியில் நடிக்கும் போதும் பட குழு எனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பது குறித்து கிண்டல் செய்து கொண்டே இருந்தனர்.

நான் அமர்ந்திருந்த வேனில் பக்கத்தில் தான் அவர்கள் பேசும் வயர்லெஸ் இருந்தது அதனால் அவர்கள் பேசுவதெல்லாம் எனக்கு கேட்டது ஒரு கட்டத்திற்கு மேல் நான் கடுப்பாகி அந்த மைக்கை எடுத்து நடிக்க தெரியாதவன் எல்லாம் நடிக்கும்போது நான் கார் ஓட்ட தெரியாமல் கார் ஓட்ட கூடாதா? சத்தம் போட்டு விட்டேன் அதற்குப் பிறகு என்னை கேலி செய்வதை அவர்கள் நிறுத்திவிட்டனர் என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

To Top