Tamil Cinema News
அந்த மாதிரி நடந்திருந்தா 6 மாசத்துக்கு வெளியவே வந்திருக்க மாட்டேன்… இயக்குனர் நெல்சனை நேரடியாக கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி..!
தமிழில் பெரிதாக தோல்வியே காணாத ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஒரு காமெடி நடிகராக சினிமாவிற்குள் வந்தாலும் கூட ஆர்.ஜே பாலாஜி தனக்கான இடத்தை எப்படி பிடித்துக் கொள்வது என்பதை அறிந்து கொண்டு தொடர்ந்து முன்னேற துவங்கினார்.
அதன் மூலமாக இப்பொழுது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெற்ற ஒரு நடிகராக அவர் மாறியிருக்கிறார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களை கொண்டதாக இருக்கும்.
வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன், மூக்குத்தி அம்மன், எல்.கே.ஜி மாதிரியான எல்லா திரைப்படங்களுமே ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டதாக இருக்கும். அதில் ஆர்.ஜே பாலாஜி கதாபாத்திரம் என்பதும் சிறப்பானதாக இருக்கும்.
ஆர்.ஜே பாலாஜியின் வெற்றிப்படங்கள்:
அதனை தொடர்ந்து இப்பொழுது இயக்குனராகவும் களமிறங்கி இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. வீட்ல விசேஷம் திரைப்படத்தைக் கூட ஆர்.ஜே பாலாஜிதான் இயக்கியிருந்தார். இந்த நிலையில் ஒரு இயக்குனருக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி.
அதில் படத்தின் வசூல் மட்டுமே ஒரு திரைப்படத்தின் வெற்றி என்று ஆகிவிடாது என்று அவர் பேசியிருந்தார். அவர் கூறும் பொழுது நான் ஒரு திரைப்படத்தை இயக்குகிறேன் அந்த திரைப்படம் குறித்து தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன.
அதே சமயம் அந்த திரைப்படம் 200 கோடிக்கு எடுக்கப்பட்டு 400 கோடி ரூபாய் வெற்றி கொடுத்திருக்கிறது என்று வைத்து கொள்வோம் இப்பொழுது 400 கோடி வெற்றி கிடைத்ததால் என்னுடைய தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பார்.
படம் இயக்குவது குறித்து ஆர்.ஜே பாலாஜி:
ஆனால் நான் என்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை அதனால் தான் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன. இதற்காக நான் ஆறு மாதம் வீட்டை விட்டே வெளியே வராமல் இருப்பேன் என்று ஆர்.ஜே பாலாஜி கூறியிருந்தார்.
சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்று கொடுத்தன. ஆனால் அதே சமயம் இரண்டு திரைப்படங்களுமே எதிர்மறையான விமர்சனங்களை அதிகமாக பெற்றன. எனவே இயக்குனர் நெல்சனை குறிப்பிட்டுதான் ஆர்.ஜே பாலாஜி இப்படி பேசுகிறாரோ என இதுக்குறித்து இணையத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன.
