இத்தனை பேரை கலாய்ச்சும் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்க இதுதான் காரணம்.! ஆர்.ஜே பாலாஜி செஞ்ச விஷயம்.!
ஆரம்பத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்றவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அதன் மூலமாக ஒரு கதாநாயகனாக தன்னை அவர் உருவாக்கிக் கொண்டார்.
பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் சாதாரணமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான ஒரு விஷயத்தை செய்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி.
கடைசியாக அவர் நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கூட ஒரு மாறுபட்ட திரைப்படமாக இருந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி தற்சமயம் இயக்குனராகவும் உருவெடுத்து இருக்கிறார். நிறைய திரைப்படங்களை அவர் இயக்கி வருகிறார்.
ஆர்.ஜே பாலாஜி:
அதில் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஆர்.ஜே பாலாஜி சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். அதன் விஷயம் என்னவென்றால் சிவகார்த்திகேயனை ஆரம்பத்தில் நிறைய இடங்களில் கலாய்த்து இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.
முக்கியமாக ஒரு மேடையில் பேசும்போது சிவகார்த்திகேயன் அழுததை திரும்பத் திரும்ப நிறைய இடங்களில் பேசியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி ஏனெனில் அப்பொழுது நடிகர் நடிகைகளை கிண்டல் செய்வதை வேலையாக வைத்திருந்தார் ஆர்.ஜே பாலாஜி.
மற்ற நடிகர்களையும் இதே போல கிண்டல் செய்திருக்கிறார் என்றாலும் அதற்காக ஆர்.ஜே பாலாஜி மன்னிப்பு கேட்டது கிடையாது. ஏனெனில் சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவர் கண்ணீர் விட்டு அழுதது என்பது ஒரு கிண்டலுக்குரிய விஷயம் கிடையாது என்பதால் அதற்கு மட்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.