விஜய் பற்றி ஓவர் டோஸாக பேசி நெட்டிசன்களிடம் சிக்கிய ரோபோ சங்கர் பேமிலி!. ஏன் இப்படி?..

கடந்த சில காலங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசு பொருளாகி வரும் விஷயமாக ரோபோ சங்கரின் குடும்ப கதைகள் உள்ளன. பொதுவாகவே பிரபலங்கள் செய்யும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மீடியாக்களின் உட்புகழ் அதிகமாக இருக்கும்.

இதனால் பல விஷயங்கள் இணையத்தில் கசிந்துவிடும். ஆனால் ரோபோ சங்கரை பொறுத்தவரை அவரது மகள் இந்திரஜாவிற்கு நிச்சயதார்த்தம் ஆனது முதலே அது தொடர்பாக யூ ட்யூப் சேனல்களில் பேட்டி கொடுப்பது என கொண்டு சென்றதால் அவர்களின் பல விஷயங்கள் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது.

thalapathy-vijay1
thalapathy-vijay1
Social Media Bar

இதற்கு நடுவே ரோபோ சங்கரின் மனைவிக்கு மருமகன் கார்த்தி உதட்டில் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போல ஒரு வீடியோவில் நீங்கள் விஜய்க்கு பத்திரிக்கை வைக்கவில்லையா ஏன் விஜய் உங்கள் திருமணத்திற்கு வரவில்லை என கேட்டிருந்தனர்.

அதற்கு பதிலளித்த இந்திரஜா கூறும்போது யார் பத்திரிக்கை வைக்கவில்லை என கூறியது. நாங்கள் பத்திரிக்கை வைக்க சென்றப்போது விஜய் கேரளாவில் கோட் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அவர் என்ன கெட்டப்பில் இருந்தார். என்ன காட்சி எடுக்கப்பட்டது என்றுக்கூட எங்களுக்கு தெரியும்.

ஆனால் அதை வெளியில் கூற மாட்டோம். மேலும் பாண்டியம்மா என கூறி என்னை கட்டியணைத்தார் விஜய். அந்த கெட்டப்பில் விஜய் செம க்யூட்டாக செம அழகாக இருந்தார் என கூறியுள்ளார் இந்திரஜா. இதற்கு பதிலளிக்கும் நெட்டிசன்கள் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர்.