News
அஜித்தோட அடுத்த படத்துல கதாநாயகி யார் தெரியுமா? வீரம் மாதிரியே அடி வாங்க வாய்ப்பிருக்கு!.
துணிவு படம் வெற்றியை கொடுத்த பிறகு அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது முதலே அஜித் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுக்கொண்டிருந்தார். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பில் தாமதமாகி வந்தது.
இந்த நிலையில் தற்சமயம் முழுக்க முழுக்க விடாமுயற்சி படத்திற்காக பணிப்புரிந்து வருகிறார் அஜித். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் அடுத்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முதல் துவங்க இருக்கிறது, தற்சமயம் இந்த திரைப்படத்திற்கான முன் வேலைகள் நடந்து வருகின்றன. மேலும் படத்தில் யாரை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சும் இருந்து வருகிறது.

குண்டூர் காரம் திரைப்படம் வெளியானது முதலே நடிகை ஸ்ரீ லீலாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. எனவே அவரை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்பது இயக்குனரின் விருப்பமாக உள்ளது. ஆனால் அதற்கு அஜித் ஒப்புக்கொள்வதற்கு வாய்ப்பில்லை என பேச்சுக்கள் இருக்கின்றன.
ஏனெனில் இப்படிதான் வீரம் திரைப்படத்தில் தமன்னாவை கதாநாயகியாக நடிக்க வைத்து அது அதிக விமர்சனத்துக்கு உள்ளானது. எனவே மிகவும் வயது குறைந்த நடிகைகளுடன் அஜித் நடிக்க மாட்டார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
