Tamil Cinema News
நான் அந்த இயக்குனரை பார்த்தே ஆகணும்.. பேரரசுக்காக காத்திருந்த சல்மான்கான்.. இந்த விஷயம் தெரியுமா?
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் இயக்குனர் பேரரசு. முதல் திரைப்படத்திலேயே பாக்ஸ் ஆபீஸ் வசூல் கொடுத்த இயக்குனர் என்று அவரை கூறலாம்.
அவரது முதல் திரைப்படம் எக்கசக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது மேலும் நடிகர் விஜய்க்கு அது ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது அதற்கு பிறகு பேரரசுக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கியது. முதல் திரைப்படத்திற்கு ஊரின் பெயரை பட பெயராக வைத்த காரணத்தினால் அதையே ஒரு அடையாளமாக மாற்றிக் கொண்டார் பேரரசு.
அந்த வகையில் பேரரசு இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்குமே ஊரின் பெயர் தான் பட பெயராக இருக்கும். அப்படி நிறைய வெற்றி படங்களை கொடுத்தார் பேரரசு. அதிகபட்சம் பேரரசின் திரைப்படங்கள் எல்லாம் குடும்ப கதைகளாகதான் இருக்கும்.
பேரரசு பற்றி சல்மான்கான்:
ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை கொடுத்தன அதற்கு பிறகு பேரரசு சினிமாவில் படம் இயக்க முடியவில்லை. அவருக்கு வாய்ப்புகள் என்பதே வராமல் போனது. இந்த நிலையில் பேரரசு குறித்து ஒரு விஷயத்தை பிரபுதேவா பேசியிருந்தார்.
அதில் அவருக்கு கூறும் பொழுது நான் சல்மான்கானை வைத்து ஹிந்தியில் பாடம் பண்ணும் பொழுது அவர் பேரரசை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார். திருப்பாச்சி திரைப்படத்தை பார்த்த சல்மான்கான் என்ன மாதிரியான ஒரு திரைப்படம் இது, இந்த படத்தின் இயக்குனரை நான் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறினார். மேலும் சிவகாசி படத்தையும் மிகவும் பெருமைப்படுத்தி பேசியிருக்கிறார் சல்மான்கான் என்று அந்த தகவலை பகிர்ந்திருக்கிறார் பிரபுதேவா.