Connect with us

44 ஊசிப்போட்டும் பயனில்லை.. 8 வருட கனவு போயிடுச்சு.. கண்ணீர் விட்டு அழுத நடிகை.

Tamil Cinema News

44 ஊசிப்போட்டும் பயனில்லை.. 8 வருட கனவு போயிடுச்சு.. கண்ணீர் விட்டு அழுத நடிகை.

Social Media Bar

தற்சமயம் சினிமா பிரபலங்கள் அளவிற்கான அந்தஸ்தை யூ ட்யூப் பிரபலங்களும் பிடித்துவிடுகின்றனர். அப்படியாக பிரபல நடிகையும் யூ ட்யூப் பிரபலமுமாக இருந்து வந்தவர் நடிகை சம்பவ்னா சேத். இவர் 44 வயதாகியும் இன்னமும் குழந்தை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.

ஹிந்தியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கொண்டார். மேலும் நிறைய பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு இவருக்கும் அவினாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

நடிகை சம்பவ்னா சேத்தை விடவும் அவரது கணவருக்கு 10 வயது குறைவு. இவர்கள் இருவரும் வெகு வருடங்களாகவே யூ ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தனர். தொடர்ந்து யூ ட்யூப் சேனலில் அவர்கள் வாழ்க்கை குறித்த பல விஷயங்களை பேசி வந்தனர்.

வெகு வருடங்களாகவே இவர்கள் இருவரும் தங்களுக்கு குழந்தை வேண்டும் என போராடி வருகின்றனர். இதனையடுத்து இவர்கள் சமீபத்தில் கண்ணீர் விட்டு வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த முறை கருவுறுதல் அவர்களுக்கு சாத்தியமாகி இருந்தது. மேலும் குழந்தை மூன்று மாதம் வளர்ச்சியடைந்திருந்தது. இந்த நிலையில் அண்மையில் குழந்தையை ஸ்கேன் செய்தப்போது குழந்தைக்கு சுத்தமாக இதய துடிப்பே இல்லை.

இதனை அடுத்து அவர்கள் கருவை கலைத்துவிட்டனர். இந்த நிலையில் தாயாவதை விட பெண்ணுக்கு வேறு சந்தோஷம் இருக்க முடியாது. குழந்தை வேண்டும் என நான் அனுபவித்த வலிகள் அதிகம். 65 ஊசிகள் போட்டு 44 வயதில் தாயானேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

ஆனால் கடவுள் என் கனவை கலைத்துவிட்டார் என கண்ணீருடன் கூறியுள்ளார் சம்பவ்னா சேத்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
soundarya
To Top