Connect with us

சத்குருவை தாக்கிய திரைப்படம்!.. காரணமே சொல்லாமல் மறுத்த சென்சார்!.. கடுப்பான இயக்குனர்!..

sadguru samuga virothi

News

சத்குருவை தாக்கிய திரைப்படம்!.. காரணமே சொல்லாமல் மறுத்த சென்சார்!.. கடுப்பான இயக்குனர்!..

Social Media Bar

Sadguru jaggi vasudev : தமிழ் சினிமாவில் சமூக விழிப்புணர்வு திரைப்படம் எடுக்கும் சில இயக்குனர்களின் சியோன் ராஜாவும் ஒருவர். ஏற்கனவே பொதுநலன் கருதி என்ற ஒரு திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை பேசும் விதமாகத்தான் இருந்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் சமூக விரோதி என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சியோன் ராஜா. இந்த திரைப்படத்தில் காடுகள் அழிப்பு குறித்து பெரிதாக பேசப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் அந்த மாதிரியான ஒரு காட்சியை தான் காட்டும் விதமாக இருக்கிறது.

மேலும் போதை மருந்து குறித்தும் அதனால் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்த திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு கற்பனையான கதை ஆகும். நாட்டுக்கு எதிரான சமூக விரோதிகளை வெளிகாட்டும் விதமாகத்தான் படத்தின் கதைகளை நாங்கள் எழுதி இருக்கிறோம். ஆனால் தணிக்கை குழு எங்களிடம் கூறும் பொழுது இந்த படத்தில் வரும் தாடி வைத்த நபரின் தாடியை கிராபிக்ஸ் மூலமாக நீக்க முடியுமா என கேட்டனர்.

அதை எதற்காக நீக்க வேண்டும் என்கிற காரணத்தையும் அவர்கள் கூறவில்லை ஏற்கனவே படத்திற்கு அதிக செலவு செய்து விட்டதால் மொத்த படத்திலும் கிராபிக்ஸ் மூலமாக தாடியை நீக்குவது என்பது முடியாத காரியம் என்று நாங்கள் கூறிவிட்டோம்.

ஆனால் தாடியை நீக்கிய பிறகுதான் என்ன சர்டிபிகேட் தரலாம் என்பதை கூற முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். எனவே எனது திரைப்படத்திற்கு தணிக்கை கொடுக்க மறுக்கிறார்கள் என்று வேதனையாக பதில் அளித்து இருக்கிறார் இயக்குனர். இது பார்ப்பதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் மாதிரி இருப்பதால்தான் தணிக்கை குழு பயப்படுகிறது என்கின்றனர் பொதுமக்கள்.

To Top