Connect with us

நான் ஒண்ணாவது படிக்கும்போது எனக்கு கழுவி விடறதே என் நண்பன்தான்!.. ஓப்பனாக கூறிய விஜய் நண்பர் சஞ்சீவ்..

vijay venkat

News

நான் ஒண்ணாவது படிக்கும்போது எனக்கு கழுவி விடறதே என் நண்பன்தான்!.. ஓப்பனாக கூறிய விஜய் நண்பர் சஞ்சீவ்..

Social Media Bar

Actor Sanjeev :நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிகப் பெரும் நடிகராக இருந்தாலும் கூட அவரது நட்பு வட்டாரம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.

பொதுவாக பிரபலங்கள் எல்லாம் வளர்ந்த பிறகு தனது துறை சார்ந்த நபர்களையே தனது நண்பர்களாக வைத்திருப்பார்கள். ஆனால் விஜய்யை பொருத்தவரை அவரது சிறு வயது முதலே பள்ளியில் அவருடன் கூட படித்த நண்பர்களைதான் இப்போது வரை நெருங்கிய நண்பர்களாக வைத்திருக்கிறார்.

vijay
vijay

அவர்களுடன் இணைந்து பார்ட்டி செய்வது அடிக்கடி சந்தித்துக் கொள்வது என்று இப்போது வரை அப்படித்தான் இருக்கிறார். ஒருமுறை எஸ்.ஏ சந்திரசேகர் தனது பேட்டியில் கூறும் பொழுது கூட விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சந்திப்பதற்காக அவர்களது வீட்டில் தனியாக ஒரு அறையை வைத்திருப்பதாக கூறி இருந்தார்.

விஜய்யின் நண்பர்கள்:

அந்த அளவிற்கு தன்னுடைய பால்ய நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் நடிகர் விஜய். அவர்களுக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகளையும் விஜய் வழங்கியிருக்கிறார். அப்படியாக விஜயுடன் சிறு வயது முதலே நண்பனாக இருந்தவர்களில் நடிகர் சஞ்சீவ் வெங்கட் முக்கியமானவர்.

இவர் விஜய்யுடன் பத்ரி, புதிய கீதை போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிறகு அவருக்கு சின்ன திரையில் வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வருகிறார். இருந்தாலும் இன்னும் விஜய்யுடன் நல்ல நட்பில் இவர் இருந்து வருகிறார்.

நடிகர் ஸ்ரீ குமாருக்கும் சஞ்சீவிக்கும் சிறு வயது முதலே நட்பு உண்டு  தலைமுறை தலைமுறையாக இவர்கள் நட்பில் இருந்து வருகின்றனர். எந்த அளவிற்கு அவர்களது நட்பு ஆழமானது என்பது குறித்து சஞ்சீவ் வெங்கட் ஒரு பேட்டியில் கூறும் பொழுது சிறு வயதில் வெஸ்டன் கழிவறையில்தான் எனக்கு போக தெரியும்.

இந்திய கழிவறைகளில் எனக்கு போக தெரியாது அப்பொழுது எனக்கு கழுவி விடுவதற்காக ஸ்ரீகுமார் கழிவறையின் வெளியிலேயே நின்று கொண்டிருப்பான். அந்த அளவிற்கு ஆழமான நட்பு எங்கள் நட்பு என்று கூறியிருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top