Connect with us

இடம் வாங்க காசு இல்லாம இருந்தப்ப அவருதான் ஹெல்ப் பண்ணுனாரு!.. நன்றிக்கடன் செய்த சந்தானம்!..

santhanam

News

இடம் வாங்க காசு இல்லாம இருந்தப்ப அவருதான் ஹெல்ப் பண்ணுனாரு!.. நன்றிக்கடன் செய்த சந்தானம்!..

Social Media Bar

சின்ன திரை மூலமாக மக்களிடம் பிரபலமாகி அதன் வழியாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆரம்பத்தில் அவர் நடிக்கும் திரைப்படங்களும் காமெடி திரைப்படங்களாகதான் இருந்தன. ஆனால் போக போக ஒரு கமர்ஷியல் கதாநாயகனுக்கு ஏற்ற விஷயங்களை தனது காமெடி படங்களிலேயே வைத்து கொண்டார் சந்தானம்.

இதனால் அவரது சில படங்களில் சண்டை காட்சிகளை கூட பார்க்க முடியும். இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் இங்க நாந்தான் கிங்கு என்கிற திரைப்படம். இந்த திரைப்படத்தை ஆனந்த் நாராயணன் இயக்குகிறார்.

Santhanam
Santhanam

சந்தானத்தோடு தம்பி ராமயா, விவேக் பிரசன்னா போன்றோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதுக்குறித்து சந்தானம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை எனக்கு பிஸ்கோத் திரைப்படம் வந்த காலம் முதலே தெரியும்.

அவர் நிறைய வட்டிக்கு விட்டு வந்தார். அதனால் நான் வீடு கட்ட நிலம் வாங்க இருந்தேன். அதற்காக அவரிடம் கடன் கேட்டு சென்றேன். அதற்கு அவர் வீடு கட்ட நிலம் வாங்க எல்லாம் கடன் வாங்காதீர்கள் என கூறி ஒரு தொகையை கொடுத்தார்.

அதன் பிறகு அந்த தொகைக்கு பதிலாக படம் நடித்து தர சொன்னார். என்று அவர் செய்த உதவிக்குறித்து விளக்கியுள்ளார் சந்தானம்.

To Top