Connect with us

ஏண்டா அந்த படத்துல நடிச்சோம்னு ஃபீல் பண்ணியிருக்கேன்!.. ஓப்பனாக கூறிய சந்தானம்.

Cinema History

ஏண்டா அந்த படத்துல நடிச்சோம்னு ஃபீல் பண்ணியிருக்கேன்!.. ஓப்பனாக கூறிய சந்தானம்.

Social Media Bar

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் சந்தானம். வடிவேலுவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சந்தானம். காமெடியனாக நடித்து வந்த சந்தானம் நாளடைவில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.

காமெடி கதாநாயகனாக இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்சமயம் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் கூட எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

தற்சமயம் நடிகர் சந்தானமும் கூட அதிகமாக பேட்டிகள் கொடுத்து வருகிறார். சில பேட்டிகளில் அவருக்கு சினிமாவில் நடந்த காமெடியான அனுபவங்களை அவர் பகிர்ந்துக்கொள்வதை பார்க்க முடிகிறது. தற்சமயம் அப்படியான ஒரு செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சந்தானத்திடம் கேள்வி கேட்கும்போது நீங்கள் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டுள்ளீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தானம் என் கண்ணில் ஏன் விழுந்தாய் என்கிற ஒரு படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக படமாக எடுத்தனர். அவ்வபோது அந்த படப்பிடிப்பிற்கு என்னை அழைப்பது வழக்கம். இப்படியாக ஒருநாள் என்னை காரில் அழைத்து சென்று ஒரு ரோட்டில் நிற்க வைத்துவிட்டு கையில் வாக்கி டாக்கியை மட்டும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். பிறகு எனக்கு போன் செய்து சார் காரில் கேமரா இருக்கு டக்குன்னு ஏதாவது காமெடி பண்ணுங்க சார் என கூறிவிட்டனர். அப்போதுதான் யோசித்தேன்.

இவர்கள் கண்ணில் நாம் பட்டிருக்க கூடாது என்று என நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

To Top