Connect with us

ரூம்ல பூட்டி படத்தை போட்டுட்டாரு… பவர் ஸ்டாரிடம் வசமாக சிக்கிய சந்தானம்!.

Cinema History

ரூம்ல பூட்டி படத்தை போட்டுட்டாரு… பவர் ஸ்டாரிடம் வசமாக சிக்கிய சந்தானம்!.

Social Media Bar

கவுண்டமணிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கவுண்டர் அடித்தே பிரபலமானவர் நடிகர் சந்தானம். பல திரைப்படங்கள் நடிகர்களுக்காக ஓடியதோ இல்லையோ சந்தானத்திற்காக ஓடியது.

உதயநிதி மாதிரியான சில நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவதற்கு உதவியதே சந்தானம்தான். சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்கிற படத்தில் நடிக்கும்போது அதில் மூன்றாவது கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்து கொண்டிருந்தனர்.

அப்போது எங்கயோ பவர் ஸ்டார் நடித்த லத்திகா திரைப்படத்தின் போஸ்டரை பார்த்த சந்தானம் இவரை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்து அவரை போய் நேரில் பார்த்தனர். அப்போது பவர் ஸ்டார் போஸ்டரை பார்த்து மட்டும் முடிவு பண்ணாதீங்க தம்பி படத்தையும் பாருங்க என கூறி அவர்களை ஒரு அறையில் அமர வைத்து லத்திகா திரைப்படத்தை போட்டுவிட்டார்.

அந்த கொடுமையை தாங்க முடியாமல் பார்த்துவிட்டு அதை நன்றாக உள்ளது என்றும் கூறிவிட்டு வந்துள்ளார் சந்தானம். இந்த விஷயத்தை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top