மோடியா நடிக்க தயார்!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்..

விஜயகாந்த், பாக்கியராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சமயத்தில் அதே அளவு பிரபலமாக இருந்தவர் நடிகர் சத்யராஜ். பொதுவாக அப்போதைய சமயத்தில் எடுத்தவுடன் நடிகர்கள் வில்லனாக நடிப்பதற்கு யோசிப்பார்கள்.

ஏனெனில் பிறகு கதாநாயகனாகவே நடிக்க வாய்ப்பு கிடையாது என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் வில்லனாக நடித்தும் கூட தொடர்ந்து கதாநாயகனாக வாய்ப்பை பெற்றவர் நடிகர் சத்யராஜ். ஏகப்பட்ட படங்களில் வரிசையாக நடித்து வந்த சத்யராஜ் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழக்க துவங்கினார்.

இருந்தாலும் இப்போதும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். ஆரம்பக்கட்டம் முதலே பெரியாரிய கொள்கைகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் சத்யராஜ். அதன் தாக்கங்களை அவரது திரைப்படங்களில் பார்க்க முடியும்.

sathyaraj
sathyaraj
Social Media Bar

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையை ஹிந்தியில் படமாக்க உள்ளனர். அதில் சத்யராஜ்தான் மோடியாக நடிக்க உள்ளார் என்று பேச்சுக்கள் இருந்தன. நேற்றிலிருந்து சமூக வலைத்தளம் முழுக்க இதுதான் பேச்சாக இருந்தது. ஏனெனில் திராவிட கொள்கைகளுக்கு எதிராக பா.ஜ.கவின் கருத்துக்கள் இருப்பதால் சத்யராஜ் எப்படி அந்த படத்தில் நடிப்பார் என்பதே பலரது கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சத்யராஜ் நீங்கள் கூறிதான் அந்த படத்தில் நடிக்க போகிறேன் என்ற தகவல் எனக்கே தெரிந்துள்ளது. இப்போது வரை அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வரவில்லை. எம்.ஆர் ராதா அவரது இறுதி காலக்கட்டங்களில் சாமி படங்களில் நடிக்கவில்லையா. அந்த மாதிரி இந்த வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளார் சத்யராஜ்,

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.