எம்.ஜி.ஆர் அப்ப ஜெயிச்சதுக்கு முக்கிய காரணமே வேற!.. சீமான் கொடுத்த விளக்கம்!.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது அரசியலிலும் பெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். அரசியல் வரலாற்றில் எந்த ஒரு நடிகருக்கும் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த அளவிலான வரவேற்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் கட்சி துவங்கிய உடனே மக்களிடம் வரவேற்பை பெற துவங்கினார்.

அதற்கு பிறகு ஏராளமான நடிகர்கள் எம்.ஜி.ஆரை போலவே அரசியலுக்கு வர முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் யாராலும் எம்.ஜி.ஆரின் இடத்தை பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இதுக்குறித்து அரசியல்வாதி சீமான் கூறும்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனப்போது அறிஞர் அண்ணா, காமராஜர், ராஜாஜி மாதிரி தமிழ்நாட்டில் மிக முக்கியமான அரசியல் ஆளுமைகள் பலர் வரிசையாக மரணமடைந்தனர்.

mgr
mgr
Social Media Bar

இதனால் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. அதில் கருணாநிதி மட்டுமே இருந்து வந்தார். எனவே இந்த வெற்றிடத்தை நிரப்பும் ஒரு ஆளாக எம்.ஜி.ஆர் இருந்துவிட்டார். எனவேதான் தேர்தலில் நின்ற முதல் முறையே அவர் ஜெயித்துவிட்டார் என்கிறார் சீமான்.

மேலும் இப்போது இருக்கும் நடிகர்கள் எல்லாம் அப்படி ஜெயிக்க முடியாது. ஏனெனில் மக்கள் உலக அரசியலை உள்ளங்கையில் வைத்துள்ளனர். அவர்கள் தினசரி செய்திகளை படிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எல்லாம் தெரிகிறது என்கிறார் சீமான்.