Connect with us

அவரும் பொண்ணுங்க விஷயத்தில் மோசமானவர்!.. பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டுக்கு பதில் கொடுத்த சீனுராமசாமி!

seenu ramasamy

News

அவரும் பொண்ணுங்க விஷயத்தில் மோசமானவர்!.. பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டுக்கு பதில் கொடுத்த சீனுராமசாமி!

Social Media Bar

Director Seenu Ramasamy : கடந்த சில நாட்களாக நடிகர் மன்சூர் அலிக்கான்தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறார் மன்சூர் அலிக்கான். மன்சூர் அலிக்கான் ஒரு பேட்டியில் பேசும்போது த்ரிஷாவுடன் படுக்கையறை காட்சிகள் இல்லை என பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து நடிகை த்ரிஷா தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து நடிகை குஷ்பு, லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் த்ரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். மேலும் பெண்கள் அமைப்புகளும், திரைப்பட சங்கங்களும் கூட இந்த நிகழ்வுக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளன.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்திரா தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் அவரது படக்குழுவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறிய வீடியோவும் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் பரபரப்பை ஏற்படுத்தும் மற்றொரு தகவலை பிரபல பத்திரிக்கையாளரான பிஸ்மி தனது பேட்டியில் கூறியிருந்தார். இயக்குனர் சீனு ராமசாமி இதே போல ஒரு நடிகைக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தார். சீனுராமசாமி நீர் பறவை, தர்மதுறை,மாமனிதன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் குறித்து பிஸ்மி கூறும்போது சீனுராமாசாமி இயக்கத்தில் நடிகை மனுஷா யாதவ் நடித்து இடம் பொருள் ஏவல் என்கிற படம் தயாரானது.

அந்த திரைப்படத்தில் சீனு ராமசாமி அவருக்கு அதிக தொந்தரவு கொடுத்ததாகவும் அது தாங்காமல் அவர் பிஸ்மியிடம் இவற்றை சொல்லி அழுததாகவும் கூறியுள்ளார் பிஸ்மி. இந்த வீடியோவை ஷேர் செய்து இதற்கு என்ன விளக்கம் தர போகிறீர்கள் சீனு ராமசாமி என கூறி ப்ளூசட்டை மாறனும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் “வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க… இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும். என கூறியுள்ளார் சீனுராமசாமி

To Top