News
இந்த வேலையெல்லாம் நமக்கு வேண்டாம்!.. கடன் தொல்லையால் கஷ்டப்பட்ட அஜித் மனைவி!.. தல எடுத்த முடிவு.
Actor Ajith: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் அஜித். நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்க கூடிய நபராக அஜித் இருக்கிறார். விஜய்யை போலவே அஜித்தும் தொடர்ந்து சண்டை படங்களாகதான் நடித்து வருகிறார்.
துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் முழுக்க முழுக்க துபாயில் தயாராகி வருகிறது. கண்டிப்பாக இந்த படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
அஜித் ஆரம்பத்தில் இருந்தே சினிமாவை விட பைக் ஓட்டுவதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இப்போது கூட துணிவு படத்தை முடித்துவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றுவிட்டார். அதன் பிறகு வெகு சிரமப்பட்டே அவர் தற்சமயம் விடாமுயற்சி படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்த நிலையில் அஜித்குமார் முன்பும் இப்படிதான் அடிக்கடி பைக் ரேஸ் செல்ல வேண்டும் என்று பலமுறை சென்றிருக்கிறார். இதனால் திருமணமான காலத்தில் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து பைக் ரேசிலேயே ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் ஏற்கனவே நடிகர் அஜித்திற்கு பொருளாதார சிக்கல்கள் இருந்த காரணத்தால் கடன் வாங்கி இருந்தார்.
இந்த கடனின் காரணமாக நெருக்கடிக்கு உள்ளானார் நடிகை ஷாலினி. பிறகு அஜித்திடம் பேசிய அவர் இப்போதைக்கு நமக்கு எந்த வேலை சரியா வருதோ அதை பார்க்கலாம். எனவே சினிமாவில் கவனத்தை செலுத்துங்கள் தாமதமாக இந்த பைக் ரேஸ் எல்லாம் பார்க்கலாம் என கூறியுள்ளார்.
மனைவியின் பேச்சை மதித்து பைக் ரேசை விட்டு மீண்டும் சினிமாவிற்கு வந்தார் அஜித். ஆனால் அதன் பிறகு ரேஸ் பக்கமே அஜித்தால் செல்ல முடியவில்லை.
