Tamil Cinema News
தனுஷோட நடிச்சதால் ஏற்பட்ட பின்விளைவு.. 10 வருஷம் கழிச்சிதான் தெரிஞ்சது.. ஓப்பன் டாக் கொடுத்த ஸ்ருதிஹாசன்.
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகைகளில் நடிகை சுருதிஹாசன் முக்கியமானவர். அவரது தந்தை கமல்ஹாசன் அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும் கூட தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் முக்கிய கதாநாயகியாக சுருதிஹாசன் இருந்து வருகிறார்.
சுருதிஹாசன் நடித்த திரைப்படத்தில் தமிழில் அவர் நடித்த 3 என்கிற திரைப்படம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்த சுருதிஹாசன் அதில் மிக நெருக்கமாக நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தின் மூலமாக மக்களுக்கு அவரை பிடிக்காமல் போய்விட்டது என்றுதான் சுருதிஹாசன் நினைத்துக் கொண்டிருந்தார். இது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும் பொழுது 3 திரைப்படத்தில் நடித்த பிறகு நான்கு வருடங்களுக்கு எனக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே அந்த ஜனனி கதாபத்திரத்தை யாருக்குமே பிடிக்கவில்லை என்று தான் நான் நினைத்திருந்தேன் ஆனால் 10 வருடங்கள் கழித்து தான் அந்த கதாபாத்திரம் தான் மக்களுக்கு அதிகமாக பிடித்திருந்தது என்பது எனக்கு தெரிந்தது என்று கூறியிருக்கிறார் சுருதிஹாசன்.
