Connect with us

குங்ஃபூ மாஸ்டராக களம் சிம்பு களம் இறங்க இதுதான் காரணம்!..  சம்பவம் இருக்கு!..

simbu 48

News

குங்ஃபூ மாஸ்டராக களம் சிம்பு களம் இறங்க இதுதான் காரணம்!..  சம்பவம் இருக்கு!..

Actor Simbu: மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் சினிமா வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன என கூறலாம். முன்பெல்லாம் சிம்பு படப்பிடிப்புக்கே ஒழுங்காக வரமாட்டார் என அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது.

ஆனால் இப்போதெல்லாம் படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிறார். பத்து தல திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதற்கு பிறகு சிம்பு கொரோனா குமார் என்னும் திரைப்படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படத்தின் கதை கமல்ஹாசன் கைவசம் சென்றது.

கமல்ஹாசன் இதுக்குறித்து சிம்புவிடம் கேட்டப்போது அதை கமல்ஹாசன் தயாரிக்குமாறும் அதில் சிம்பு நடிப்பதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இந்த திரைப்படம் தயாராக இருக்கிறது.

Social Media Bar

ஆனால் கொரோனா குமார் திரைப்படத்தின் கதையில் இருந்து இது மொத்தமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் எப்போதுமே திரைக்கதையின் மீது அதிக கவனம் செலுத்துபவர். அதுவும் அவர் தயாரிக்கும் படம் எனும்போது கதையில் கவனம் செலுத்தாமல் இருப்பாரா.

எனவே இந்த கதை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. அதன் படி படத்தில் ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் மாஸ்டராக வருகிறார் சிம்பு. குங்ஃபூ குறித்து தமிழில் மிக சரியாக வந்த ஒரே திரைப்படம் முகமூடி திரைப்படம்தான். அதற்கு பிறகு மார்ஷல் ஆர்ட்ஸிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படம் என்பதால் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு கூடியுள்ளது.

இயற்கையாகவே நமது மக்கள் ஜாக்கி சான் மாதிரியான குங்ஃபூ படங்களின் மீது ஆர்வம் உண்டு. இதை அறிந்தே சிம்பு இந்த கதையை தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் முகமூடி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்பதால் இந்த திரைப்படம் வெற்றி பெறுமா என்கிற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

To Top