தக் லைஃப்பில் அப்படியொரு கதாபாத்திரம் சிம்புவுக்கு!.. நெசமாதான் சொல்றாங்களா!.

பொதுவாக பெரிய ஹீரோக்கள் மணி ரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டார்கள் என்றால அடுத்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பது அரிதுதான். சிம்பு மாதிரியான சில கதாநாயகர்கள் இதற்கு விதி விலக்கு.

இந்த நிலையில் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்தினத்தோடு மீண்டும் படம் நடிக்காமல் இருந்த கமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்சமயம் மீண்டும் அவரது இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தக் லைஃப் திரைப்படத்தின் ஆரம்ப டீசரே வேறு ரகமாக இருந்தது. மேலும் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் இருந்தது. இந்த திரைப்படத்தை பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே மற்ற மொழிகளில் உள்ள நடிகர்கள் பலரையும் இதில் நடிக்க வைத்துள்ளனர்.

thug-life
thug-life
Social Media Bar

மேலும் நடிகர் சிம்புவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது என்ன கதாபாத்திரம் என்பது குறித்து அரசல் புரசலான செய்தி வந்தது. அதன்படி கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடிக்கிறாராம். இதனால் படத்தில் சிம்புவும் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சிம்பு, கமல்ஹாசன் காம்போவிலேயே யாரும் படம் பார்த்தது கிடையாது. இதில் கமலுக்கு மகனாக சிம்பு நடிப்பது எப்படி இருக்கும் என்று இப்போதே இதுக்குறித்து ஆவலில் இருக்கின்றனர் ரசிகர்கள்.