Tamil Cinema News
சிம்ரனோட எனக்கு கிடைத்த வாய்ப்பு… வேண்டாம்னு சொல்லிட்டேன்.. உண்மையை கூறிய கருணாஸ்.!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்பதை தாண்டி குணச்சித்திர நடிகராக மிகவும் பிரபலமானவர் நடிகர் கருணாஸ். ஆரம்பத்தில் நிறைய படங்களில் காமெடி நடிகராக கருணாஸ் நடித்து வந்தார். அதற்கு பிறகு அவர் தொடர்ந்து கதாநாயகனாக வாய்ப்பைப் பெற்று நடிக்க தொடங்கினார்.
பெரும்பாலும் கருணாஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் இருக்கும். தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் காமெடி கதாநாயகனாக நடித்து வந்தார் கருணாஸ் ஆனால் காமெடியையும் தாண்டி அவருக்கு சீரியசான கதாபாத்திரங்களும் நடிக்க வரும்.
நடிகர் கருணாஸ்:
இருந்தாலும் அந்த மாதிரி கதை களங்களை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் அவர் காமெடியாக தேர்ந்தெடுத்த திரைப்படங்களும் சிறப்பான கதை களங்களை எல்லாம் கொண்டு இருக்கவில்லை. மிகவும் சுமாரான திரைப்படங்களாகவே அவை இருந்தன.
அப்படியாக வெளியான திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி ரகளபுரம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை பெறவில்லை.
தொடர்ந்து கருணாசுக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கருணாஸ் பேசும் போது என்னுடைய கெப்பாசிட்டி என்ன என்று எனக்கு தெரியும்.
சிம்ரனோடு நடிக்க மாட்டேன்:
நான் முதன் முதலாக திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில்தான் கதாநாயகனாக நடித்தேன். அந்த படத்தில் நான் நடிக்கும் பொழுது எனக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனம் சிம்ரனுடம்தான் இதற்காக பேசியிருந்தனர்.
ஆனால் எனக்கு கண்டிப்பாக தெரியும் அது ஏற்றுக்கொள்ளும்படி இருக்காது என்று எனவே நான் சிம்ரன் அந்த கதாபாத்திரத்திற்கு வேண்டாம் எனக்கு ஏற்றார் போல சுமாரான ஒரு நடிகையை படத்தில் கதாநாயகியாக வையுங்கள் என்று கூறினேன். எந்த ஒரு நடிகனாவது தன்னுடைய முதல் படத்திலேயே சிம்ரன் நடிக்கிறார் என்று கூறினால் வேண்டாம் என்று கூறுவானா? ஆனால் நான் கூறினேன் என்று கருணாஸ் கூறியிருக்கிறார்.
