Cinema History
இது கிராமத்து பாட்டு சார்!.. வழக்கமா பாடுற மாதிரி பாடாதீங்க!.. எஸ்.பி.பியை காண்டாக்கிய இசையமைப்பாளர்!..
SP balasubramaniyam: எஸ்.பி.பி தமிழ் மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான ரசிக பட்டாளத்தை கொண்ட ஒரு பாடகர் என கூறலாம். எத்தனை பேர் பாடல்கள் பாடினாலும் அதில் எஸ்.பி.பியின் குரலை மட்டும் தனியாக கண்டுப்பிடித்து விடலாம்.
எம்.எஸ்.வியில் துவங்கி இப்போது இருக்கும் அனிரூத் ரவிச்சந்திரன் வரை அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் எஸ்.பி.பி பாடல்களை பாடியுள்ளார். முக்கியமாக ரஜினிகாந்திற்கு மிக நெருங்கிய நண்பராக இருந்து வந்தார் எஸ்.பி.பி.

எஸ்.பி.பி தன்னுடைய முதல் பாடலை பாடினால் அந்த படம் வெற்றி கொடுக்கும் என்பது ரஜினிகாந்தின் நம்பிக்கையாக இருந்தது. இதனாலேயே ரஜினி நடிக்கும் திரைப்படங்களில் அதிகப்பட்சமாக முதல் பாடலை எஸ்.பி.பிதான் பாடினார். அண்ணாத்த திரைப்படம் வரை இந்த காம்போ தொடர்ந்தது. அதற்கு பிறகு எஸ்.பி.பி காலமானார்.
குறை கூறிய இசையமைப்பாளர்:
பொதுவாக எஸ்.பி.பி பாடல்கள் பாடும்போது அவருக்கென்று ஒரு சில விஷயங்களை தனித்துவமாக வைத்திருப்பார். அவற்றை பாடலில் கலந்துவிடுவார். பாடும்போதே சிரிப்பது, வெட்கப்படுவது போன்ற விஷயங்களை அவர் பாடலில் செய்வார்.
இப்படி பெரியண்ணா திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பரணி இசையமைத்த பொழுது தண்ணானே தாமரப்பூ என்கிற பாடலுக்கான இசையமை அமைத்திருந்தார். அதை எஸ்.பி.பி பாடும்போது வழக்கமான அவரது தோரணையிலேயே பாடியிருந்தார். ஆனால் அது கிராமிய பாடல் வகையில் இசையமைக்கப்பட்டிருந்ததால் குரலில் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருக்க வேண்டும். வரிகளை கொஞ்சம் இழுத்து பாட வேண்டும் என நினைத்தார் பரணி.

ஆனால் அதை எஸ்.பி.பியிடம் கூறுவதற்கு அவர் பயப்பட்டார். இந்த நிலையில் எப்படியோ இந்த செய்தியை கேள்விப்பட்ட எஸ்.பி.பிக்கு கோபம் வந்துவிட்டது. என் பாட்டையே அவன் குறை கூறுகிறானா என நேரில் சென்று என் பாடல் சரியில்லையென்றால் எப்படி பாட வேண்டும் என பாடி காட்டு என கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.
உடனே அந்த பாடலை பிரமாதமாக பாடியிருக்கிறார் பரணி. அதனை கேட்டதும் எந்த இடங்களில் தவறு செய்துள்ளோம் என்பது எஸ்.பி.பிக்கு புரிந்துள்ளது. உடனே மீண்டும் அந்த பாடலை முழுவதுமாக பாடி கொடுத்துள்ளார் எஸ்.பி.பி.
