Cinema History
இந்த பய கேட்க மாட்டான் போல!.. எல்லோரும் வாட்ச்சை கழட்டுங்க!.. சிவாஜியை காண்டேத்திய ஃபைட் மாஸ்டர்!..
சினிமாவில் நடிகர் திலகம் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சிவாஜி கணேசன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தா சிவாஜி கணேசன்.
என்னதான் பெரிய நடிகராக ஆனாலும் சிவாஜி கணேசன் தனக்கென ஒரு சில விதிமுறைகளை வைத்திருந்தார். எக்காரணத்தை கொண்டும் படத்தின் கதையில் சிவாஜி கணேசன் தலையிட மாட்டார். ஏனெனில் கதை முழுக்க முழுக்க இயக்குனருடையது. அதை மாற்றும் உரிமை அவருக்குதான் உண்டு என்ற கொள்கை கொண்டவர் சிவாஜி கணேசன்.
அதே போல படப்பிடிப்பு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். அதே போல படப்பிடிப்பு நேரம் முடியும் நேரத்திற்குள் எடுத்து முடிக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எடுத்துவிட வேண்டும். ஆனால் சண்டை மாஸ்டர் ஃபெஃப்ஸி விஜயன் தான் அன்று ஃபைட் மாஸ்ட்ராக இருந்தார்.
படப்பிடிப்பு துவங்கும்போதே அவரிடம் எத்தனை மணிக்கு படப்பிடிப்பு முடியும் என கேட்டுள்ளார் சிவாஜி. அதற்கு அவர் 4 மணிக்கு முடிந்துவிடும் என சிவாஜிக்கு பதிலளித்துள்ளார். ஆனால் 4 மணியை தாண்டியும் கூட படப்பிடிப்பு சென்றுக்கொண்டே இருந்துள்ளது.
இதனை பொறுமையாக பார்த்த சிவாஜி கணேசன் உடனே அங்கே பணிப்புரிந்த அனைவரையும் அழைத்து அவர்கள் கை கடிகாரங்களை கழட்ட சொன்னார். அவற்றை கொண்டுபோய் விஜயனிடம் கொடுத்து எல்லா கடிகாரத்திலும் மணி 4 ஆயிடுச்சு. உன் கடிகாரத்துல மட்டும் இன்னும் ஆகலையா தம்பி என கேட்டுள்ளார்.
அந்த அளவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் கோபப்படாமல் எளிதாக டீல் செய்யும் மனிதராக சிவாஜி இருந்துள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்