Connect with us

அயலான் சிறப்பான திரைப்படம்!.. போதை மருந்தை வச்சி படம் எடுக்கலை!.. லோகேஷ் கனகராஜை நக்கல் செய்த எஸ்.கே!.

ayalaan leo

News

அயலான் சிறப்பான திரைப்படம்!.. போதை மருந்தை வச்சி படம் எடுக்கலை!.. லோகேஷ் கனகராஜை நக்கல் செய்த எஸ்.கே!.

Social Media Bar

Lokesh kanagaraj: ஒரு சில படங்களில் நடித்து முடித்து உடனே அடுத்து தயாரிப்பாளராக களம் இறங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் தயாரிப்பாளராக களம் இறங்குவது என்பது சாதரணமான விஷயமல்ல. அதற்கு பெரும் நம்பிக்கை தேவைப்படுகிறது.

இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் கூட ரஜினிகாந்த் பெரிதாக படங்கள் எதுவும் தயாரித்தது கிடையாது. ஓரிரு படங்கள் தோல்வியை கண்டாலே அடுத்து இவர்களுக்கு படங்களை தயாரிப்பதில் விருப்பமில்லாமல் போய்விடுவதை பார்க்க முடியும்.

ஆனால் ஒரு ஆரம்பக்கட்ட நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். பல படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்து கடும் கடனுக்கு உள்ளாக்கியப்போது கூட சிவகார்த்திகேயன் படம் தயாரிப்பதில் இருந்து பின் வாங்கவில்லை.

sivakarthikeyan
sivakarthikeyan

இந்த நிலையில் பெரும் பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தை பெரும் நம்பிக்கையோடு தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். வருகிற பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் எஸ்.கே படம் குறித்து பேசும்போது இந்த படத்தில் ரத்த காட்சிகளோ முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ கிடையாது. குடும்பத்தோடு வந்து ஜாலியாக பார்க்கும் விதமாக படம் இருக்கும் என கூறியிருந்தார்.

இதற்கு நடுவே தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ் கூறும்போது எங்கள் படம் ஏற்கனவே ஹிட்டு, நாங்கள் ஏலியனை நம்புகிறோம், போதை மருந்து பவுடரை நம்பி படம் எடுக்கவில்லை என கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இரத்தம் அதிகமாக உள்ள படங்களாக எடுக்கிறார்.மேலும் போதை பொருள் காட்சிகளும் அவரது படங்களில்தான் அதிகமாக உள்ளது. எனவே அவரைதான் குறிப்பிட்டு பேசியுள்ளனர் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது!.

To Top