Tamil Cinema News
நான் ப்ளான் பண்ணுனது வேற.. இப்ப நடக்குறது வேற… ரசிகையிடம் உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்..!
நடிகர் சிவகார்த்திகேயன்தான் கடந்த இரு நாட்களாகவே அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா கேரளா மாதிரியான மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது அமரன் திரைப்படம். எனவே முதல் நாள் வசூலை விட போகப்போக இதன் வசூல் இன்னமுமே அதிகரிக்கலாம் என்பது பேச்சாக இருந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். தற்சமயம் சினிமாவில் முயற்சி செய்யும் இளைஞர்கள் பல பேருக்கு இவர் தான் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
சினிமாவில் எதிர்பார்ப்பு வேற:
இந்த நிலையில் சிவகார்த்திகேயனிடம் ரசிகை ஒருவர் சமீபத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதில் கேட்கும் பொழுது ஒரு காலத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு நீங்கள் வந்தீர்கள். இப்பொழுது உங்களை போல சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கே வாய்ப்பு அளிக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
என்றாவது நீங்கள் உங்களுடைய கடந்த காலத்தை நினைத்து பார்த்ததுண்டா என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் ஆமாம் நான் எப்பொழுதெல்லாம் துவண்டு போகிறானோ? அப்போதெல்லாம் என்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்ப்பேன்.
பழசை நினைத்து பார்ப்பேன்:
கஷ்ட காலங்களில் என்ன மாதிரியான முடிவெடுத்தேன் என்று யோசிப்பேன் என்னுடைய பழைய வீடியோக்களை நானே பார்ப்பேன். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் என்னை மீண்டும் எழ செய்யும்.
மேலும் நான் என்ன நினைத்து சினிமாவிற்கு வந்தனோ அந்த விஷயத்தை நான் அடையவில்லை. நான் நினைத்து வந்தது வேற இப்பொழுது சினிமாவில் நடப்பது வேறு. எனக்கு கடவுள் கொடுத்த விஷயங்கள் வேறு என்று கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதற்கு முன்பே ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறும் பொழுது காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் கூட நடித்து விடலாம் என்று தான் சினிமாவிற்கு வந்தேன் ஆனால் மக்களின் ஆதரவால் இப்பொழுது கதாநாயகனாக மாறி இருக்கிறேன் என்று அவர் கூறி இருந்தார்.
