40 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் எஸ்.கே.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானாலும் கூட அவருக்கு சீக்கிரத்திலேயே கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
கதாநாயகனாக நிறைய வெற்றி படங்களை கொடுத்தார் சிவகார்த்திகேயன் ஆனால் பெரும்பாலும் கதாநாயகனாக நடிக்கும் போதும் கூட காமெடி கதாநாயகனாகதான் நடித்து வந்தார்.
இந்த நிலையில் சீரியஸான கதைகளங்களில் இறங்குவதற்கு வெகு காலங்களாகவே சிவகார்த்திகேயன் யோசித்து வந்தார். ஏனெனில் அதை மக்கள் எந்த அளவிற்கு விரும்புவார்கள் என்பதில் அவருக்கு சந்தேகம் இருந்து வந்தது.

இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் சிவகார்த்திகேயன் யோசித்ததற்கு மாறாக மக்களுக்கு சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் பிடித்திருந்தது.
அந்த திரைப்படம் நல்ல வெற்றியும் பெற்றது. சில நாட்களுக்கு முன்புதான் அந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா நடந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்திற்கு மேல் திரைப்படங்களை தயாரிக்க துவங்கினார்.
அவர்களின் சில திரைப்படங்கள் தோல்வியை கண்டன. அவற்றில் சில நல்ல வெற்றியை கொடுத்தன. சிவகார்த்திகேயனுக்கு நல்ல வருமானம் வந்த பிறகுதான் திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார். இன்று அவரது நாற்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்தது முதல் இதுவரை மொத்தமாக 150 கோடி ரூபாய்கள் சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை தான் அவர் திரைப்படங்களை தயாரிக்க பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் பேசப்படுகிறது.