News
ஜேம்ஸ் பாண்ட் மாதிரி அடுத்து ஒரு படம்!.. இயக்குனர்களுக்கு க்ளு கொடுத்த சிவகார்த்திகேயன்!..
Sivakartikeyan : தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலமாக வைத்துக் கொள்ளும் ஒரு கதாநாயகன் என்றால் அது சிவகார்த்திகேயன்தான். ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்புகள் இவருக்கு வாய்ப்பு கிடைத்தப்போது மக்கள் மத்தியில் அதிக பேட்டிகள் எல்லாம் கொடுக்காமல் இருந்தார் சிவகார்த்திகேயன்.
மான் கராத்தே திரைப்படத்தின் போது மட்டும் விஜய் டிவிக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதன் பிறகு மக்கள் மத்தியில் அவருக்கான வரவேற்புகள் குறைய துவங்கிய பொழுது சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு எவ்வளவு முக்கியமாக பயன்படுகிறது என்பதை சிவகார்த்திகேயன் புரிந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு படம் வெளியாகும் பொழுதும் அதற்கு ஏதாவது ஒரு டிவி சேனலில் சென்று பேட்டி கொடுப்பதை வழக்கமாக ஆக்கிவிட்டார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் தற்சமயம் அவரின் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஆனால் ஒரு ஏலியன் திரைப்படத்தை தமிழில் முதன் முதலில் வெளியிட்டாக வேண்டும் என்பதே சிவகார்த்திகேயனின் ஆசையாக இருந்தது முக்கியமாக அதை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
அந்த ஒரு எண்ணத்தில்தான் சம்பளம் கூட வாங்காமல் அயலான் திரைப்படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கூறும் பொழுது எனக்கு நிறைய ஹாலிவுட் சார்ந்த திரைக்கதைகளில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது.

வெகு நாட்களாகவே ஏலியன் குறித்த படம் ஒன்றை தமிழில் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. அதேபோல ஹாலிவுட்டில் வரும் இந்தியானா ஜோன்ஸ் திரைப்படம் போல ஒரு சாகச கதையைக் கொண்ட திரைப்படத்தை தமிழில் எடுத்து அதில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.
மேலும் ஜேம்ஸ் பாண்ட் மாதிரியான ரகசிய உளவாளி கதையை அடிப்படையாகக் கொண்ட கதையிலும் நடிக்க ஆர்வம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். தற்சமயம் கதை எழுதும் இயக்குனர்கள் சிவகார்த்திகேயன் கூறும் இந்த மாதிரியான கதைகளை எழுதி அவரிடம் செல்லும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
