Tamil Cinema News
எம்.எஸ்.விக்காக காத்திருந்த சிவக்குமார். முதல் சந்திப்பில் நடந்த சம்பவம்..!
எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக உள்ளே வந்தவர் நடிகர் சிவகுமார். சிவகுமார் வந்த காலகட்டங்களில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.
சொல்லப்போனால் ரஜினிகாந்த் சினிமாவில் என்ட்ரி ஆகும்பொழுதே சிவகுமார் பெரிய நடிகராக இருந்தார் என்று தான் கூற வேண்டும். சிறுவயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது சிவகுமாருக்கு எம்.எஸ்.வி.ஐ ஒரு தடவை வாழ்வில் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
இந்த நிலையில் பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்திற்கு எம் எஸ் வி இசையமைத்துக் கொண்டு இருந்த பொழுது அவரிடம் உதவியாளராக இருந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்த செல்லமுத்து என்பவர்.
அவர் சிவகுமாரை எம்.எஸ்.வியிடம் அழைத்து சென்றுள்ளார். முதல் சந்திப்பிலேயே அவரை பார்த்த உடனே எம்.எஸ்.வி கட்டிப்பிடித்து வாழ்த்தி இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்றால் சிவகுமார் நடித்த மறுபக்கம் என்கிற திரைப்படம் அப்பொழுது பெரிய வரவேற்பு பெற்றிருந்தது.
அந்த படத்தை ஏற்கனவே எம்.எஸ்.வி பார்த்திருந்தார். அப்போது முதலே சிவக்குமாரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். இந்த நிலையில் தான் சிவகுமாரை சந்திக்கும் வாய்ப்பு எம்.எஸ்.விக்கும் கிடைத்தது. அந்த தருணத்தை வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று சிவக்குமார் ஒரு பத்திரிகை பேட்டியில் கூறி இருக்கிறார்.
