Tamil Cinema News
எஸ்.ஜே சூர்யாவுக்கு பிரச்சனையை உண்டு பண்ணுன பெண்… பார்த்ததும் ஆடிப்போன புகழ்.. இதுதான் காரணம்.!
பெரும்பாலும் பேட்டிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பேசும் விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் பேசும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சர்ச்சையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நிறைய பிரபலங்கள் இப்படி பேட்டிகளில் பேசி நிறைய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றனர். உதாரணத்திற்கு நடிகர் அஜித்தை கூறலாம். நடிகர் அஜித் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பேட்டிகளில் எல்லாம் பங்கு பெற்றுக் கொண்டுதான் இருந்தார்.
ஆனால் அந்த மாதிரி பேட்டிகளில் அவர் பேசும் விஷயங்களை தவறாக மக்கள் மத்தியில் காட்டி வந்தனர் டிவி சேனல் காரர்கள். இதனால் கோபமடைந்த அஜித் அதற்கு பிறகு யாருக்குமே பேட்டி கொடுப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தார்.
பேட்டியில் நடந்த சம்பவம்:
இப்போது வரை பத்திரிகையாளர் யாருக்குமே அவர் பேட்டி கொடுப்பதை பார்க்க முடியாது. இதே மாதிரி எஸ்.ஜே சூர்யா ஒரு பிரச்சனையில் சிக்கினார் எஸ்.ஜே சூர்யா சமீபத்தில் நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அப்படியாக ஒரு திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் பேட்டிக்கு சென்றிருந்தார். அங்கு அவரை ஏதாவது ஒரு பாட்டு பாடும்படி கேட்டிருந்தார் அங்கிருந்த தொகுப்பாளர்.
உடனே எஸ் ஜே சூர்யா அன்பே ஆருயிரே திரைப்படத்தில் வரும் பொதிகை மலையில் என துவங்கும் பாடல் ஒன்றை பாடினார். பிறகு அந்த வீடியோ அதிக வைரலானது தொடர்ந்து அதை வைத்து எஸ் ஜே சூர்யாவை கேலி செய்து வந்தனர் நெட்டிசன்கள்.
இந்த நிலையில் அதே பெண், நடிகர் புகழையும் சமீபத்தில் பேட்டி எடுத்தார் அப்பொழுது புகழை ஒரு பாட்டு பாடும் படி அவர் கேட்டுக் கொண்டார் உடனே பயந்து போன புகழ் ஏற்கனவே எஸ் ஜே சூர்யாவை வைத்து நீங்கள் செய்தது போதும் என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியிருந்தார்.
