Tamil Cinema News
படம் தோக்கலாம். ஆனால் ரகுமான் தோற்க மாட்டார்.! ஆச்சரியப்பட்ட எஸ்.ஜே சூர்யா..!
நடிகர் எஸ் ஜே சூர்யா இயக்குனராக ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்போதைய தலைமுறையினருக்கு அவரை ஒரு நடிகராக தான் தெரியும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் வாய்ப்புகள் பெற்று நடித்thu வருகிறார் எஸ்.ஜே சூர்யா.
எஸ் ஜே சூர்யாவின் தனிப்பட்ட நடிப்புக்கு தனி மதிப்பு இருக்கும் காரணத்தினால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றது. தற்சமயம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்து வருகின்றன.
தற்சமயம் பிரதீப் ரங்கநாதன் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்.ஐ.கே திரைப்படத்திலும் எஸ்.ஜே சூர்யா தான் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் குறித்து ஒரு பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்து இருந்தார் எஸ் ஜே சூர்யா.
அதில் எஸ் ஜே சூர்யா கூறும் பொழுது ஏ.ஆர் ரகுமானை பொறுத்தவரை அவர் இசையமைக்கும் படங்கள் தோல்வியடைந்தாலும் கூட அவரது இசை மட்டும் தோல்வி அடையாது. உதாரணத்திற்கு சங்கமம் திரைப்படத்தை கூறலாம்.
சங்கமம் திரைப்படத்தில் வந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் அந்த திரைப்படம் திரையரங்கில் தோல்வியை கண்டது ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அதன் வெற்றி தோல்வி அமைகிறது.
ஒரு இசையமைப்பாளரால் தீர்மானிக்க முடியாது ஆனால் அவர்களால் எதை சிறப்பாக கொடுக்க முடியுமோ அதை கொடுத்து விடுவார்கள் அந்த விஷயத்தில் ஏ ஆர் ரகுமானை தோற்கடிக்கவே முடியாது என்று கூறி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.
