முதல் முதலா இப்படி ஒரு படம் நடிக்கும் எஸ்.கே… சிம்பு படத்தோட இப்படி ஒரு கனெக்டா!..

Sivakarthikeyan and Simbu: டான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய புள்ளியாக மாறினார். அவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு உண்டாகி வருகிறது.

இடையில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. ஆனால் அதற்கு பிறகு வந்த மாவீரன் மற்றும் அயலான் இரண்டு திரைப்படங்களுமே சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான திரைப்படங்களாக அமைந்தது. அயலான் திரைப்படத்தை பொறுத்தவரை அதிக பட்ஜெட்டில் தமிழில் வந்த முதல் ஏலியன் திரைப்படம் ஆகும்.

Social Media Bar

அதே போல அதற்கு முன்பு வந்த மாவீரன் திரைப்படமும் சூப்பர் ஹீரோ திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு இன்னமும் ஏதும் பெயர் வைக்கவில்லை. சிவகார்த்திகேயன் நகைச்சுவையை முன்னிலைப்படுத்தி நடிக்க வந்ததால் தொடர்ந்து காமெடி படங்களாகவே நடித்து வருகிறார். அவரது அனைத்து திரைப்படங்களிலும் காமெடி காட்சிகள் அதிகமாக இருப்பதை பார்க்க முடியும்.

ஆனால் தற்சமயம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படத்தில் சுத்தமாக காமெடி காட்சிகளே கிடையாது. முதன் முதலாக காமெடி காட்சிகளே இல்லாமல் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஏற்கனவே டான் என்கிற திரைப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்த படத்தில் காமெடி காட்சிகள் இருந்தன.

ஆனால் இந்த படம் முழுக்க முழுக்கவே சீரியஸ் திரைப்படம்தான் என கூறப்படுகிறது. ஆனால் முழுக்க முழுக்க சீரியஸாக இருக்கும் சிவகார்த்திகேயனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே!..

இந்த படத்தின் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் வருகிற 17 ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சிம்புவும் கூட இதே போல கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படம் தமிழர்களின் மாண்பை பேசும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறதாம். அதே சமயம் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் இந்திய தேசிய உணர்வை பறை சாற்றும் வகையில் இருக்கிறதாம்.