Connect with us

சினிமாவில் உச்சத்தை தொட்டது முதல் வேதனை பக்கங்கள் வரை.. ஸ்வர்ணலதாவின் சொல்ல முடியா சோகங்கள்..!

Tamil Cinema News

சினிமாவில் உச்சத்தை தொட்டது முதல் வேதனை பக்கங்கள் வரை.. ஸ்வர்ணலதாவின் சொல்ல முடியா சோகங்கள்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் குறுகிய காலங்களே இருந்தாலும் கூட தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பாடகியாக இருந்தவர் பாடகி சொர்ணலதா. தன்னுடைய 14 வயதிலேயே பாடும் திறனை பெற்ற சொர்ணலதா தொடர்ந்து சில காலங்களிலேயே நன்றாக பாடுவதில் தேர்ச்சி பெற்றார்.

இந்த நிலையில்தான் சினிமாவில் பாடல்கள் பாடுவதன் மீது அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து எம்.எஸ் விஸ்வநாதனை தொடர்பு கொண்டு தனக்கு பாட வாய்ப்பு தரப்படி கேட்டுள்ளார் சொர்ணலதா.

உடனே எம்.எஸ்.வி ஏதாவது ஒரு பாடலை பாடி காட்டு நன்றாக இருந்தால் சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே சொர்ணலதா அங்கேயே பாடி இருக்கிறார். அதனை கேட்டு எம்.எஸ்.விக்கு உடனே பிடித்து விட்டது.

சொர்ணலதாவுக்கு கிடைத்த விஷயம்:

இப்படியாக எம்.எஸ்.வி முதன்முதலாக சொர்ணலதாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் என்று தமிழ் சினிமாவில் பெரும் புள்ளியாக இருந்த அனைவருமே சொர்ணலதாவின் குரலை கேட்டு ஆச்சரியப்பட்டு போனார்கள்.

அதனால் அவர்களும் எடுத்த உடனே சொர்ணலதாவிற்கு வாய்ப்புகளை கொடுத்தார்கள் புதிய காலமே தமிழ் சினிமாவில் இருந்தாலும் கூட 7 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை சொர்ணலதா பாடி இருக்கிறார். சோக பாடல்கள், மகிழ்ச்சியான பாடல்கள் என்று காதல் பாடல்கள் என்று அவர் பாடாத பாடல்களே கிடையாது.

இவ்வளவு திறமைகள் இருந்தும் அவருடைய 37 வது வயதிலேயே உயிரிழந்தார் சொர்ணலதா. 2010 ஆம் ஆண்டில் நுரையீரல் தொற்று காரணமாக அவர் உயிரிழந்தார். ஒருவேளை இப்பொழுது அவருக்கு அந்த பிரச்சனை ஏற்பட்டிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

ஆனால் அப்பொழுது மருத்துவ வளர்ச்சி அந்த அளவிற்கு இல்லாத காரணத்தினால் சுவர்ணலதா உயிரிழந்தார். ஆனாலும் கூட சொர்ணலதாவிற்கு இருந்த மார்க்கெட் சொர்ணலதாவின் பாடல்களுக்கு அப்போது என்ன வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பு இன்னும் ஒன்று வருகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
To Top