எதுக்கு இந்த வேலை பாக்குறீங்க.. சௌந்தர்யாவை ஜெயிக்க வைக்க மோசடியில் இறங்கிய காதலர்.. கண்டுப்பிடித்த பிக்பாஸ் பிரபலம்!.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியப்போது அதில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான போட்டியாளராக சௌந்தர்யா இருந்து வந்தார்.
ஏனெனில் சௌந்தர்யா நஞ்சுண்டான் வந்த ஆரம்பத்தில் முதல் 2 வாரங்கள் எதுவுமே செய்யாமல் இருந்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது கேம் வேறு விதமாக இருந்தது. மக்கள் மத்தியிலும் இவருக்கு வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டார். தற்சமயம் பிக்பாஸ் ஃபைனல் வின்னருக்கான ஓட்டெடுப்பானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜெயிப்பதற்காக சௌந்தர்யா சில மோசடி வேலைகளில் இறங்கியுள்ளதாக முன்னால் பிக்பாஸ் பிரபலமான ஷனம் ஷெட்டி கூறியுள்ளார்.

அவர் கூறும்போது சௌந்தர்யா நஞ்சுண்டனுக்கு ஓட்டு போடுவதற்காக ஒரு மொபல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் ஓட்டு போட முடியும். இந்த நிலையில் சௌந்தர்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய மொபைல் எண் போல அந்த எண்ணை பதிவு செய்து வைத்துள்ளார்.
அவருக்கு 5 லட்சம் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் சௌந்தர்யாவின் நம்பர்தான் அது என நினைத்து அந்த எண்ணுக்கு போன் செய்து வருகின்றனர். இதன் மூலமாக அவருக்கு ஓட்டு கிடைத்து வருகிறது. மேலும் அவருடைய காதலன் விஷ்ணுவும் அவர் பங்குக்கு ஒரு விஷயத்தை செய்து வருகிறார்.
அதாவது இன்பாக்ஸில் அர்ஜெண்ட் உடனே இந்த நம்பருக்கு போன் செய்யவும் என சௌந்தர்யா நம்பரை ரசிகர்களிடம் ஷேர் செய்து வருகிறாராம் விஷ்ணு. ரசிகர்களும் என்னவோ ஏதோவென அந்த நம்பருக்கு போன் செய்கின்றனர். அதன் மூலம் சௌந்தர்யாவுக்கு ஓட்டு கிடைக்கிறது என கூறியுள்ளார் ஷனம் செட்டி.