தமன்னாவுக்கு பதிலாக ஜெயிலர் 2 வில் மூன்று இளம் சிட்டு நடிகைகள்.. பயங்கரமான காம்போவா இருக்கே.!

ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படங்களில் எந்திரன், 2.0 திரைப்படங்களை தொடர்ந்து அடுத்து அவருக்கு ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்த திரைப்படம் ஜெயிலர்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் கூட அந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் அதில் இடம் பெற்றிருந்த காவாலா பாடலுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அப்போதே ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு திட்டமிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால் ஜெயிலர் 2 திரைப்படம் உடனடியாக எடுக்கப்படவில்லை.

Social Media Bar

அதற்கு நடுவே வேட்டையன், கூலி மாதிரியான திரைப்படங்களில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். இதற்கு நடுவே அடுத்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் தமன்னா மாதிரியே மூன்று இளம் நடிகைகளை இறக்கி அவர்களுக்கு பாடல்களும் வைப்பதற்கு திட்டமிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் விக்ரம் வேதா மாதிரியான படங்களில் நடித்து பிரபலமடைந்த ஸ்ரத்தா ஸ்ரீ நாத் மற்றும் நடிகை ஸ்ரீ லீலா இவர்கள்தான் காவாளா பாடல் மாதிரியே இதில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது இல்லாமல் நடிகை பிரியங்கா மோகனும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.