ஜெயிலர் 2 திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு அடுத்து சுந்தர் சி இயக்கத்தில்தான் ரஜினிகாந்த் நடிக்க போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு பிறகுதான் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடித்து துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சுந்தர் சி யும் ரஜினிகாந்த்தும் காம்போ போட்டு உருவான திரைப்படம் அருணாச்சலம். அந்த திரைப்படம் வெளியான காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அதற்கு பிறகு அவர்கள் இருவரும் இணைந்து எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவே இல்லை. அதற்கு பிறகு அவர்கள் ஒன்று சேரும் திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு நிறைய தயாரிப்பாளர்கள் முன் வந்து இருக்கின்றனர்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பாளர் ஐசரி கணேசுக்கு தான் வாய்ப்பை கொடுப்பார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் பல வருடங்களுக்கு முன்பே ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ரஜினிகாந்த் வாக்கு கொடுத்து இருந்தார்.
ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் என்பது அமையவே இல்லை எனவே இந்த படத்திற்கான வாய்ப்பை அவருக்கு தான் கொடுப்பார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.









