முதலில் நயன்தாராகிட்ட டேட் வாங்கிட்டு வாங்க.. தயாரிப்பாளரை அனுப்பிய சுந்தர் சி.. தொங்கலில் நிற்கும் மூக்குத்தி அம்மன்.!

இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய நல்ல திரைப்படங்களை வழங்கி வருகிறார். அவரது இயக்கத்தில் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் காமெடி படங்களாகவே இருந்து வந்துள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் மீண்டும் சுந்தர் சிக்கு நல்ல மார்க்கெட் வர துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் பலரும் சுந்தர் சிக்கு வாய்ப்பு தர தயாராக இருக்கின்றனர்.

இயக்குனர் சுந்தர் சி கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குவதற்கு ஏற்கனவே திட்டமிட்டு வருகிறார். இதற்கு நடுவே தற்சமயம் நடிகர் சந்தானத்தை கதாநாயகனாக வைத்து ஒரு காமெடி திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி.

mookuthi amman
mookuthi amman
Social Media Bar

இந்த திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தைகள் தற்சமயம் சென்று கொண்டுள்ளன. சுந்தர் சி இயக்கும் திரைப்படத்தில் எப்போதுமே சந்தானத்தின் காமெடி என்பது நன்றாகவே இருக்கும்.

எனவே இந்த திரைப்படமும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே சுந்தர் சி ஏற்கனவே வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி தருவதாக கூறியிருந்தார். அது நிலுவையில் இருக்கும் நிலையில்தான் சந்தானம் திரைப்படத்தில் அவர் கமிட்டாகி இருக்கிறார்.

இந்த நிலையில் முதலில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைதான் சுந்தர் சி முடித்து தர வேண்டும் என கேட்டு வருகிறார் தயாரிப்பாளர். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சுந்தர் சி முதலில் நடிகை நயன்தாராவிடம் கால்ஷூட் கேளுங்கள். பிறகு என்னிடம் கேட்கலாம் என கூறிவிட்டாராம்.

ஏற்கனவே ஒரு படத்தில் நடிகை நயன் தாரா இப்படி கால்ஷூட் கொடுக்காமல் சுந்தர் சியை அலைகழித்ததாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதனால்தான் சுந்தர் சி இப்படியான பதிலை கொடுத்துள்ளார் என கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.