Connect with us

அரண்மனை மாதிரியே அந்த பழைய படத்தையும் திரும்ப எடுக்க ப்ளான் இருக்கு!.. அப்டேட் கொடுத்த சுந்தர் சி!..

sundar c

News

அரண்மனை மாதிரியே அந்த பழைய படத்தையும் திரும்ப எடுக்க ப்ளான் இருக்கு!.. அப்டேட் கொடுத்த சுந்தர் சி!..

Social Media Bar

சுந்தர் சி இயக்கும் படங்களுக்கு பெரும்பாலும் சினிமாவில் நல்ல வெற்றி கிடைத்து வருகிறது. அதனால்தான் இத்தனை வருடங்கள் ஆன பிறகும் கூட அவரது திரைப்படங்களுக்கு இருக்கும் மார்க்கெட் மட்டும் குறையவே இல்லை.

இந்த நிலையில் காமெடி திரைப்படங்களை இயக்கி வந்த சுந்தர் சிக்கு எப்படி பேய் படத்தை இயக்குவதற்கான ஐடியா வந்தது என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன சுந்தர் சி ‘சாதாரணமாகவே எனக்கு பேய்கள் என்றாலே பயம்.

aranmanai 4
aranmanai 4

முதலில் நான் பேய் படமே பார்க்க மாட்டேன். வீட்டில் கூட தனியாக தூங்க மாட்டேன். இப்போதுவரை அப்படிதான் இருக்கிறேன். அதனாலேயே ஹாரர் படங்கள் பக்கம் போகாமல் இருந்தேன். ஆனால் ஒரு நாள் எங்கள் வீட்டில் விஷேசம் ஒன்று நடந்துக்கொண்டிருந்தப்போது இரவில் வீட்டில் உள்ள பெண்களும் குழந்தைகளும் சேர்ந்து பேய் படம் பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போதுதான் பேய் படம் இவ்வளவு பேருக்கு பிடிக்கிறதே என்று நானும் அப்படியான திரைப்படத்தை இயக்க துவங்கினேன் என கூறுகிறார் சுந்தர் சி. மேலும் அவர் கூறும்போது இதே போல உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தையும் திரும்ப இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்குமா தெரியவில்லை என கூறியுள்ளார் சுந்தர் சி.

To Top